நள்ளிரவில் சித்ரா தங்கியிருந்த ஹொட்டலுக்கு வந்த அமைச்சர் யார் ? அமைச்சர் ஜெயக்குமார் கூறிய உண்மை இதோ !

சித்ரா தங்கியிருந்த ஹொட்டலுக்கு அமைச்சரின் காரின் நள்ளிரவு வந்தது என கூறுவது ஆதாரமில்லாத குற்றச்சாட்டு என அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.

தமிழ் சின்னத்திரை நடிகை சித்ரா சில தினங்களுக்கு முன்னர் நசரத்பேட்டையில் உள்ள ஹொட்டலில் கணவர் ஹேமந்துடன் தங்கினார்.

அப்போது அவர் அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

அதேநேரத்தில் நடிகை சித்ரா தங்கியிருந்த ஹொட்டலுக்கு ஒரு அமைச்சரின் கார் வந்து சென்றது, சிசிடிவி கமெராவில் தெரியவந்துள்ளதாக தகவல் வெளியானது.

அந்த காரில் வந்த அமைச்சர் யார் என்பது தெரியவில்லை எனவும் கூறப்பட்டது.

இது குறித்து பேசிய அமைச்சர் ஜெயக்குமார், மறைந்த நடிகை சித்ரா தங்கியிருந்த ஹொட்டலுக்கு அமைச்சரின் கார் வந்தது என்று சொல்வதெல்லாம் ஆதாரமில்லாத குற்றச்சாட்டு. இதற்கு பதில் சொல்ல முடியாது. காவல்துறை உரிய விசாரணை மேற்கொண்டு வருகிறது என கூறியுள்ளார்.