உயிரை அணுவணுவாக கொல்லும் உணவுகள்! இந்த உணவுகளை அடிக்கடி சாப்பிடவே சாப்பிடாதீங்க…பேராபத்து

இன்றைய நவீன உலகில் பலருக்கும் சமைக்க கூட நேரமின்றி கடைகளில், ஹேட்டல்களிலும் தான் அதிகம் உணவை வாங்கி சாப்பிட்டு வருகின்றனர்.

இவை ருசியையும் சுவையையும் மட்டும் தான் கொடுக்கின்றது. உண்மையில் கடைகளில் வாங்கி சாப்பிடும் ஏராளமான உணவுகள் நமது உடல் ஆரோக்கியத்தை சீர்குலைக்கும் விதமாக தான் உள்ளது.

இன்றைக்கு பலரும் அவஸ்தைப்பட்டு கொண்டிருக்கும் உடல்பருமன், இதய நோய், நீரழிவு போன்ற நோய்கள் வர காரணமாக இந்த ஆரோக்கியத்தை கெடுக்கும் உணவுகள் தான் உள்ளது.

ஆனால் இதை அடிக்கடி சேர்ப்பது நம்மை ஆபத்தான ஆரோக்கிய பாதைக்கு அழைத்து செல்லும் என்று எச்சரிக்கிறார்கள் உணவியல் நிபுணர்கள்.

தற்போது அந்த உணவுகள் என்னென்ன என்பதை நாமும் தெரிந்து கொள்வோம்.

உருளைக்கிழங்கு சிப்ஸ்

இது அதிக வெப்பநிலையில் பொரித்தெடுக்கும் உருளைக்கிழங்கு சிப்ஸ் ,பிரெஞ்ச் ஃப்ரை என ஆழமாக வறுக்கும் இவை தான் எப்போதும் உங்கள் தேர்வாக இருந்தால் அது உங்கள் உடலில் பெருங்குடல், மலக்குடல், ப்ரோஸ்டேட், சிறுநிர்ப்பை போன்றவற்றுக்கு ஆபத்தை உண்டாக்கலாம்.

எனினும் இது உங்கள் மறுக்க முடியாத விருப்பமாக இருந்தால் வீட்டில் தயாரித்து எடுத்துகொள்ளலாம்.

​சுத்திகரிக்கப்பட்ட உணவு

வெள்ளை ரொட்டிகள், வெள்ளை பாஸ்தா, கேக், குக்கீஸ், காலை உணவாக தானியத்தில் செய்யப்பட்டவை எல்லாமே வெளியிலிருந்து வாங்கி சாப்பிடும் போது ஆரோக்கியமானது கிடையாது. இவை பெரும்பாலும் செறிவூட்டப்பட்ட கோதுமை மாவில் இருந்து தயாரிக்கப்படுபவை.

இதில் இருக்கும் அதிகமான கார்போஹைட்ரேட் உங்கள் வளர்சிதை மாற்றத்தில் குறைபாட்டை உண்டாக்கும்.

மேலும் இந்த சுத்திகரிக்கப்பட்ட உணவு பொருள்கள் ஊட்டசத்துக்கள் இல்லாதது என்பதோடு எளிமையான சர்க்கரையாக மாறக்கூடியது. இவை தொடர்ந்து எடுத்துகொள்ளும் போது உடலில் ரத்த சர்க்கரை அளவு அதிகரிக்க செய்கிறது.

மேலும் இந்த மாவுச்சத்து உடல் எடையை அதிகரிக்க செய்கிறது. தினசரி உணவில் சுத்திகரிக்கப்பட்ட உணவுகள் டைப்2 நீரீழிவு, இதய நோய், உயர் ரத்த அழுத்தம் போன்ற அபாயத்தை அதிகரிக்க செய்கிறது.

பழச்சாறுகள்

கடைகளில் விற்கப்படும் இந்த வகை பழச்சாறுகளில் பெரும்பாலானவற்றில் இனிப்பு சுவைக்காக பிரக்டோஸ் இருப்பதை இருப்பதனால் தினசரி பழச்சாறுகளை எடுத்துகொளும் போது இது உடல் எடையை அதிகரிக்க செய்கிறது.

பிறகு உடலில் கொழுப்புகள் அதிகரிக்கப்பட்டு தொப்பையை உண்டாக்குகிறது.

​சமையல் எண்ணெய்

செக்கில் ஆட்டிய எண்ணெய்களால் தாவரங்களிலிருந்த சத்துகள் குறையாமல் அழிக்கப்படாமல் அப்படியே கிடைத்தது. இதை தொடர்ந்து காய்கறி எண்ணெய்கள் ஆலிவ் எண்ணெய், சூரிய காந்தி எண்ணெய் என்று பல தயாரிப்புகளை தற்போது வாங்கி பயன்படுத்துகிறோம்.

இதில் இருக்கும் ஒமேகா 6 கொழுப்பு அமிலங்கள் உடலுக்கு தேவை என்றாலும் நாள்பட்டு அதிகளவில் உடலில் சேர்வதால் கூடுதல் கொழுப்பு உடலில் உருவாகிறது.

சோயா பீன் எண்ணெய், சோள எண்ணெய், பருத்திவிதை எண்ணெய், சூரியகாந்தி எண்ணெய் வேர்க்கடலை எண்ணெய், நல்லெண்ணெய், அரிசி தவிட்டு எண்ணெய் போன்றவற்றை சுத்திகரிப்ப்பதால் இதை அளவாக பயன்படுத்துவது நல்லது.

​துரித உணவு

​துரித உணவு முன்கூட்டியே தயாரிக்கப்பட்டு பதப்படுத்தி வைக்கப்பட்டிருப்பதால் இதில் ஊட்டச்சத்துக்கள் வெளியேற்றப்படுகிறது. அதிக கலோரிகள் நிறைந்த இதை சாப்பிடுவதால் நன்மை உடல் பருமன் அதிகரிக்கும். எனவே இதை அதிகம் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். இது உடலில் கொழுப்பை அதிகரிக்க செய்கிறது.

உடலை மந்தமாக வைத்திருக்கிறது. இந்த கொழுப்புகள் நாளடைவில் ரத்த குழாய்களில் அடைப்பை உண்டாக்கி இதய நோய்கள் அபாயத்தையும் ஊக்குவிக்கிறது.

மேலும் எலும்புகள் பலவீனமடைவது, மலச்சிக்கல், பெருங்குடல் புற்றுநோய் வரையான அபாயத்தை உண்டாக்கிவிடுகிறது.

​விதவிதமான காஃபி பானங்கள்

காஃபியில் காஃபைன் இருந்தாலும் இது ஆக்ஸிஜனேற்றம் நிறைந்தது என்பதா ல் அளவாக குடிக்கும் போது எந்த மாற்றமும் உண்டாக்காது . இதனால் டைப்2 நிரிழிவு மற்றும் பார்கின்சன் நோய் அபாயம் குறையக்கூடும்.

ஆனால் காஃபியில் அலங்காரமாய் க்ரீம், கேரம்ல் , இனிப்பு தூள் போன்றவற்றை தூவி அதிக இனிப்புக்காக கூடுதல் சர்க்கரை சேர்த்து குடிக்கும் போது அது சுவையாக இருக்கும் ஆனால் இது சர்க்கரை மற்றும் அதிக கலோரிகள் நிறைந்தவை. இது உடல் பருமனை தூண்டும்.

​பதப்படுத்தப்பட்ட சீஸ்

​பதப்படுத்தப்பட்ட சீஸில் இது சோடியம் சிட்ரேட்டால் நிரம்பியுள்ளது. இதை தினமும் அல்லது அதிகமாக எடுத்துகொள்ளும் போது தசைப்பிடிப்பு உண்டாகும் சிறுநீரக பிரச்சனை இருப்பவர்களுக்கு அதை அதிகமாக தூண்டும்.

மேலும் கால்சியம் நிறைந்த பால் பொருள்களாக சீஸ் பதப்படுத்தப்படும் போது எலும்புகளை மென்மையாக்குகிறது. இது ஆஸ்டியோபொராசிஸ் பிரச்சனைக்கு வழிவகுக்கிறது.