கடைசியாக சித்ராவின் வாட்ஸ் ஆப்புக்கு வந்த குறுஞ்செய்திகள்.. தற்கொலை தூண்டியது இவரா? தீவிர விசாரணையில் போலீசார்

தற்கொலை செய்துகொண்ட நடிகை சித்ராவின் மரணம் தொடர்பாக தினந்தோறும் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகிவருகின்றன.

இதையடுத்து, சித்ராவின் மரணத்தில் மர்மம் இருப்பதாக பெற்றோர்கள் அளித்த புகாரின் பேரில் போலீசார் கணவர் ஹேமந்திடம் விசாரணையை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், சித்ராவின் செல்போனை ஆய்வு செய்த போலீஸாருக்கு அதில் சில முக்கியத் தகவல்கள் கிடைத்திருக்கின்றன.

அதில், சித்ராவின் செல்போனுக்கு தினேஷ் என்பவர் அடிக்கடி போனில் பேசிவந்திருக்கிறார். யார் அவர் என்று போலீஸார் விசாரித்தபோது தினேஷ்தான், சித்ரா கலந்துகொள்ளும் விழாக்களுக்கு ஏற்பாடு செய்து கொடுத்தவர் என்ற தகவல் கிடைத்திருக்கிறது.

அதனால், சித்ரா தொடர்பான தகவல்களை தினேஷிடம் விசாரிக்க போலீஸார் முடிவு செய்திருக்கின்றனர்.

இதனைத்தொடர்ந்து, சித்ரா, கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ஒரு கடைத் திறப்புவிழாவுக்கு சென்றிருக்கிறார்.

அந்த விழாவில் அறிமுகமான அரசியல் பிரமுகர் ஒருவர், சித்ராவின் செல்போன் நம்பருக்கு `குட்மார்னிங், குட்நைட் என்ற மெசேஜ்களை முதலில் அனுப்பி வந்திருக்கிறார்.

அதன் பிறகு இருவரும் நட்பாக மெசேஜ் மூலம் தகவல்களைப் பகிர்ந்திருக்கின்றனர். அந்த அரசியல் பிரமுகரின் வாட்ஸ்அப் மெசேஜ்கள் அடிப்படையில் அவரிடமும் விசாரணை நடத்த போலீஸார் முடிவு செய்திருக்கின்றனர்.

மேலும், சித்ராவின் செல்போனில் சில தடயங்கள் அழிக்கப்பட்டிருப்பதாக சைபர் க்ரைம் போலீஸார் கண்டறிந்திருக்கின்றனர். அதனால் அதை மீட்டெடுக்கும் முயற்சியில் சைபர் க்ரைம் போலீஸார் ஈடுபட்டிருக்கின்றனர்.