தனது அடுத்தப்பட ரிலீஸ் குறித்து அதிரடி தகவலை வெளியிட்ட நடிகர் விஜய்சேதுபதி! செம குஷியில் ரசிகர்கள்!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரான விஜய் சேதுபதி எஸ்.பி.ஜனநாதன் இயக்கத்தில் நடித்து வரும் திரைப்படம் லாபம். இப்படத்தில் நாயகியாக நடிகை சுருதிஹாசன் நடிக்கிறார். மேலும் அவர்களுடன் ஜெகபதிபாபு, கலையரசன், சாய் தன்ஷிகா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். டி.இமான் இசையமைக்க, ஆறுமுககுமார் மற்றும் விஜய் சேதுபதி இருவரும் இணைந்து இந்தப் படத்தைத் தயாரிக்கின்றனர்.

இந்நிலையில் படத்தின் உரிமையை நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளம் வாங்கியிருப்பதாக செய்திகள் வெளிவந்தன. இதைத் தொடர்ந்து லாபம் திரைப்படம் திரையரங்கில் வெளியாகாது எனவும், ஓடிடியில் நேரடியாக வெளியாகும் எனவும் தகவல்கள் தீயாய் பரவியது. இந்நிலையில் இதுகுறித்து நடிகரும், தயாரிப்பாளருமான விஜய் சேதுபதி விளக்கம் அளித்துள்ளார்.

விஜய் சேதுபதி சமூக அரசியலை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள லாபம் திரைப்படம் நேரடியாக ஓடிடியில் வெளியாகாது. திரையரங்க வெளியீடாகவே இருக்கும் என கூறியுள்ளார். அதன் பிறகுதான் ஓடிடியில் வெளியாகும் என்றும் தெரிவித்துள்ளார். இதனால் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.