பிரபல கிராமியப் பாடகர்களான புஷ்பவனம் குப்புசாமி மற்றும் அனிதா குப்புசாமி அவர்கள் தங்களது மகள்களுடன் சென்னையில் அண்ணாமலைபுரத்தில் வசித்து வருகின்றனர்.

இதையடுத்தும், அவர்கள் தங்களது வீட்டின் அருகிலேயே விஹா என்ற ஆர்கானிக் சோப்பு தயாரிக்கும் நிறுவனத்தை நடத்தி வருகிறார்கள்.

இங்கு மைலாப்பூர் பகுதியைச் சேர்ந்த 18 வயது மற்றும் 17 வயதுடைய சகோதரிகள் வேலை செய்து வந்துள்ளனர்.

இந்நிலையில், அவர்கள் சமீபத்தில் நாங்கள் வேலை செய்ததற்கான சம்பளத்தைக் கேட்டததாகவும்,அதற்கு அவர்கள் தங்களை அடைத்து வைத்து தங்களது தாயை வரச்சொல்லி காலில் விழச் சொல்லி மன்னிப்புக் கேட்டுவிட்டு அழைத்து செல்லும்படி கூறியதாகவும் புகார் அளித்துள்ளனர்.

இந்த புகாரின் பேரில் புஷ்பவனம் குப்பு சாமியின் வீட்டு சிசிடிவி கேமராவை சோதனையிட்ட போது பல உண்மைகள் தெரிய வந்ததுடன் புஷ்பவனம் குப்பு சாமி மீது அந்த சிறுமிகள் பொய் புகார் கொடுத்ததும் தெரியவந்துள்ளது.

மேலும், புஷ்பவனம் குப்புசாமியும் அவரது மனைவியும் இல்லாத நேரத்தில், அங்கு தாயுடன் சிறுமிகள் வந்து ரகளை செய்தது மட்டும் இன்றி, குப்புசாமியின் மகளை அடித்ததும் பதிவாகியுள்ளது.

சிறுமிகள் கொடுத்த ஆதார் கார்டு விவரத்திலும், பிறந்த தேதி மாற்றப்பட்டு மோசடி செய்யப்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது.

இதனால், இரு தரப்பும் தற்போது இந்த விவகாரத்தை பெரிதாக்காமல் சமரசமாக போக பேசி வருவதாகவும் கூறப்படுகிறது.