நள்ளிரவில் நடிகை சித்ரா தங்கியிருந்த ஹொட்டலுக்கு வந்த அமைச்சர்! சிசிடிவி கமெராவில் சிக்கிய காட்சிகள் பரபரப்பு தகவல் இதோ !

சித்ரா தங்கியிருந்த ஹொட்டலுக்கு நள்ளிரவில் அமைச்சர் வந்து சென்ற செய்தி பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.

ஹொட்டல் அறையில் சின்னத்திரை நடிகை சித்ரா மர்மமான முறையில் உயிரிழந்த விவகாரத்தில், அவர் தற்கொலை செய்து கொண்டது பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரியவந்துள்ளது.

இதனால் அவரது தற்கொலைக்கு யார் காரணம் என்பது குறித்து பொலிசார் தீவிர விசாரணையை துவக்கினர்.

அதன்படி சித்ராவுக்கும் அவர் கணவர் ஹேம்நாத்துக்கும், சித்ராவுக்கும் இடையே நள்ளிரவில் ஏதாவது பிரச்சனை இருந்ததா அல்லது படப்பிடிப்பில் ஏதாவது பிரச்னையா அல்லது வேறு ஏதாவது காரணத்தால் அவர் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது கொலை செய்யப்பட்டாரா என்று பல்வேறு கோணங்களில் விசாரிக்கப்பட்டு வருகிறது.

அதேநேரத்தில் நடிகை சித்ரா தங்கியிருந்த ஹொட்டலுக்கு ஒரு அமைச்சரின் கார் வந்து சென்றது, சிசிடிவி கமெராவில் தெரியவந்துள்ளது. அந்த காரில் வந்த அமைச்சர் யார் என்பது தெரியவில்லை.

சென்னையில் கருப்பு எம்ஜிஆர் என்று தன்னைத்தானே அழைத்துக்கொள்ளும் அமைச்சர் ஒருவர் நிறைய நடிகைகளுடன் பழக்கம் வைத்துள்ளதாக கூறப்படுகிறது.

இவர், புறநகரில் உள்ள ஹொட்டலில் நடிகைகளுடன் விருந்து நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வாராம். இதனால் அவர் வந்து சென்றாரா அல்லது அந்த ஹொட்டலில் வேறு அமைச்சர் யாராவது தங்கியிருந்து நள்ளிரவில் வெளியேறினாரா, எதற்காக அமைச்சரின் கார் ஹொட்டலுக்கு வந்து சென்றது என்பது மர்மமாக உள்ளது.

ஆனாலும், நடிகையின் தற்கொலைக்கு யாராவது தூண்டுகோலாக இருந்திருக்க வேண்டும் என்று பொலிசார் சந்தேகித்து விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.