44 லட்சம் திருட்டு! அப்பா இல்லாதபோது அவர் அடிக்கடி வீட்டிற்கு வருவார்! வாக்குமூலத்தால் அம்பலமான காதல் ரகசியங்கள்!

சென்னை மந்தைவெளி பகுதியைச் சேர்ந்தவர் தமீம் அன்சாரி. 40 வயது நிறைந்த இவர் ஜவுளி தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி தஸ்லின். இவர்களுக்கு13 வயதில் ஒரு மகளும், 8 வயதில் மகனும் உள்ளனர். இந்த நிலையில் கடந்த 20 ஆம் தேதி இவர்களது மகனுக்கு வீட்டில் கோலாகலமாக பிறந்தநாளை கொண்டாடியுள்ளனர். , இந்நிலையில், மறுநாள் தஸ்லின் வீட்டில் இருந்த 44 லட்சம் பணத்தை காணவில்லை என தனது கணவனிடம் கூறியுள்ளார்.

மேலும் பிறந்த நாள் விழாவுக்கு வந்த தமீம் தங்கை கணவர்தான் பணத்தை திருடி சென்றதாகவும் அதை தான் பார்த்ததாகவும் தஸ்லின் தெரிவித்துள்ளார். அதனை தொடர்ந்து தமீம் இதுகுறித்து போலீசாரிடம் புகார் அளித்துள்ளார். இந்நிலையில் போலீசார் தஸ்லினிடம் விசாரித்தபோது அவர் பேசியது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. பின்னர் அவரது செல்போனை ஆய்வு செய்ததில் புரசைவாக்கத்தைச் சேர்ந்த ரியாஸ் அகமது என்பவரிடம் தஸ்லீன் அடிக்கடி போனில் பேசியது தெரியவந்தது.

பின்னர் ரியாஸை பிடித்து விசாரணை மேற்கொண்டபோது, தஸ்லினின் கணவர் தொழில் ரீதியாக வெளியூர்களுக்கு அடிக்கடி சென்றநிலையில், பேஸ்புக் மூலம் தஸ்லினுக்கு ரியாஸுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. பின்னர் இவர்களது பழக்கம் திருமண உறவை மீறிய காதலாக மாறியுள்ளது. இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்துள்ளனர். இந்நிலையில் தஸ்லீன் தனது கணவன் சம்பாதித்த பணம், தங்க நாணயங்கள், நகைகளை ரியாஸுக்கு வாரி இறைத்துள்ளார்.

இந்நிலையில்தான் இருவரும் ஒன்றாக சேர்ந்து வாழ திட்டமிட்டு வீட்டிலிருந்த 44 லட்சத்தை ரியாஸுக்கு கொடுத்துவிட்டு, பின்னர் ஒன்றும் தெரியாததுபோல நாடகமாடியுள்ளார் என்பது தெரியவந்தது. மேலும் இதுகுறித்து பிள்ளைகளும் வாக்குமூலம் கொடுத்ததாக கூறப்படுகிறது. பின்னர் போலீசார் இருவரையும் கைது செய்து, ரியாஸிடம் இருந்த 41 லட்சம் மற்றும் தங்க நாணயங்களை பறிமுதல் செய்து தமீமிடம் ஒப்படைத்தனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.