விஜய் டி.வி.யில் ஒளிப்பரப்பாகிவரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லை என்ற கதாப்பாத்திரத்தில் நடித்தவர் சித்ரா. 29 வயதாகும் இவர் இன்று 09.12.20-ம் தேதி அதிகாலை 02.30 மணிக்கு, ஈ.வி.பி ஃபிலிம் சிட்டியில் நேற்றிரவு நிகழ்ச்சி படப்பிடிப்பு முடித்துவிட்டு ஹோட்டல் ரூமிற்கு வந்துள்ளார்.

மக்கள் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக அறிமுகமானவர் நடிகை சித்ரா. இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வருகிறார். மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக தற்போது உள்ளார்.

பாண்டியன் ஸ்டோர் தொடரில் நடிக்கத் தொடங்கிய சித்ராவுக்கு முல்லை என்ற கதாபாத்திரம் மிகுந்த பெருமை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது. நடிகை சித்ராவுக்கு தனிப் பெரும் ரசிகர் பட்டாளமே உள்ளது.

சமூக வலைத்தளங்களில் தனது புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்துவந்தார். சித்ராவுக்கு சமீபத்தில் தான் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்று முடிந்தது.

இந்நிலையில், சென்னை அடுத்த நசரத்பேட்டையில் உள்ள தனியார் நட்சத்திர ஓட்டலில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இன்னும் சில மாதங்களில் திருமணம் நடைபெற இருந்த நிலையில் விபரீத முடிவு எடுத்துள்ளார்.

இவரது தற்கொலைக்கான காரணம் என்னவென்று எந்த தகவலும் தெரியவில்லை. தனக்கு நிச்சயம் செய்த ஹேமந்த் ரவி என்பவருடன் சித்ரா ஒன்றாக தங்கியிருந்துள்ளார்.

இந்நிலையில், சித்ரா ஹேமந்த்திடம் தான் “நான் குளிக்கணும், கொஞ்சம் வெளிய வெயிட் பண்ணுங்க..” என்று கூறியுள்ளார். இதனால், வெளியே சென்றார் ஹேமந்த். வெகுநேரம் ஆனதால் அறையின் கதவை தட்டியதாகவும் ஹேமநாத் தெரிவித்துள்ளார்.

கதவை சித்ரா திறக்காததால் ஹோட்டல் ஊழியரிடம் சொல்லி மாற்று சாவியை எடுத்துவந்து திறந்து பார்த்தபோது சித்ரா அறையில் உள்ள மின்விசிறியில் புடவை மூலம் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டது தெரியவந்துள்ளது.

இது குறித்து நசரத் பேட்டை போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.

இந்நிலையில், இவர் தற்கொலை செய்து கொண்டார் என்ற தகவல் வெளியாகி அனைவரையும் மலைத்து போக செய்துள்ளது. சோசியல் மீடியாவில் அவ்வளவு துடிப்பாக, சுறுசுறுப்பாக இயங்கும் இவரா தற்கொலை செய்து கொண்டார்…? என்று அதிர்ச்சியுடன் சந்தேகம் எழுப்பி வருகிறார்கள் ரசிகர்கள்.
நேற்று இரவு 10 மணிக்கு கூட தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நடிகை சரண்யா துராடி சுந்தர்ராஜுடன் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட வீடியோ ஒன்றை ஸ்டேட்டஸாக வைத்துள்ளார் சித்ரா.
அந்த வீடியோவில் வழக்கம் போல கலகலப்பாகவே இருக்கும் அந்த நிகழ்ச்சியின் படப்பிடிப்பு முடிந்ததும் இரவு 2 மணி வாக்கில்அருகில்இருந்தஹோட்டல்அறைக்குசென்றுள்ளார்.
ஆனால்,காலையில் அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் என்ற தகவல் ரசிகர்களின் இதயத்தை கனக்க செய்துள்ளது என்று தான் கூறியாக வேண்டும்.

இதோ, நேற்று இரவு 09:40 மணிக்கு அவர் அப்லோட் செய்த கடைசி இரண்டு வீடியோக்கள்.
இந்த வீடியோவில் வழக்கம் போல மகிழ்ச்சியாக இருக்கும் சித்ரா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் என்பதை நம்பவே முடியவில்லை என கண் கலங்கி வருகிறார்கள் அவரது ரசிகர்கள்.