சத்தியமா இன்னும் என்னால் நம்ப முடியவில்லை நீ இல்லை என்று! சித்ரா குறித்து மணிமேகலை உருக்கம்

சீரியல் நடிகையான சித்ரா நேற்றிரவு சென்னையில் உள்ள தனியார் ஹொட்டலில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் இவரது மறைவு குறித்து நிகழ்ச்சி தொகுப்பாளினியான மணிமேகலை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உருக்கமான பதிவொன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் ” மிகவும் அதிர்ச்சியாக உள்ளது சித்ரா. நீ எவ்வளவு வலிமையான பெண் என்பது எனக்கு தெரியும். ஆனால், இந்த முடிவை நீ ஏன் எடுத்தாய் என தெரியவில்லை, நேற்று கூட ஒரே மேக்கப் அறையில், பல்வேறு விஷயங்கள் குறித்து பேசி, படப்பிடிப்புக்கு தயாரானோம்.

ஆனால் இன்று இப்படி ஒரு மோசமான செய்தி, என்னால் இன்னும் நம்ப முடியவில்லை, நீ இல்லை என்று” என உருக்கமாக பதிவிட்டுள்ளார்.