1992ம் ஆண்டு மே 2ஆம் தேதி சென்னையில் பிறந்த சித்ரா, 2013ம் ஆண்டு மக்கள் தொலைக்காட்சியில் சட்டம் சொல்வது என்ன நிகழ்ச்சியில் முதன் முதலாக தொகுப்பாளினியாக அறிமுகமானார்.

அதன் பிறகு சன் டிவியில் ஒளிபரப்பான சின்ன பாப்பா, பெரிய பாப்பா என்ற தொடரில் நடித்து வந்தார். தொகுப்பாளினி, நடிகை, நடனம், மாடலிங் என பல திறமைகளை சித்ரா கொண்டிருந்தார்.

அடுத்த மாதம் திருமணம் நடக்க உள்ளதாக கூறியிருந்த சித்ரா, இன்று அதிகாலை திடிரென தற்கொலை செய்துகொண்ட சம்பவம் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மிகவும் துடிப்பாக,சுறுசுறுப்பாக இருக்கும் இவருக்கு தற்கொலை செய்து கொள்ளும் அளவுக்கு அப்படி என்ன கஷ்டம்..? அப்படி என்ன சூழ்நிலை..? இத்தனைக்கு இவர் சைக்கலாஜி படித்தவர்.

ஏற்கனவே ஜியா கான் மற்றும் பிரத்யுஷா பேனர்ஜி போன்ற நடிகைகள் போலவே இவருக்கும் காயம் ஏற்பட்டுள்ளது. இவர் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது கொலை செய்யப்பட்டாரா என்று யார் முடிவு செய்தது.

அவர் கன்னத்திலும் , தாடையில் உள்ள காயங்கள் எப்படி…? அவருடைய தற்கொலை கடிதம் எங்கே.. தற்கொலை செய்து கொண்டார் என்ற போலியான விஷயங்களை பகிர்வதை நிறுத்துங்கள் என்று ரசிகர்கள் தங்களது குமுறல்களை தெரிவித்து வருகிறார்கள்.