‘எதிர்பாராததை எதிர் பாருங்கள்’ என்ற ஆண்டவரின் சொல்லிற்கு ஏற்றாற்போல், விஜய் டிவியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் பிக் பாஸ் 4 நிகழ்ச்சி நகர்ந்துகொண்டிருக்கிறது.

மேலும் இந்த நிகழ்ச்சியின் ஒவ்வொரு வார இறுதியிலும் நாமினேட் செய்யப்பட்ட ஒரு நபர் பிக்பாஸ் வீட்டில் இருந்து மக்கள் ஓட்டின் அடிப்படையில் வெளியேற்றப்படுவார். இதற்காக வாரத்தின் முதல் நாளான திங்கட்கிழமை முதல் வேலையாக நாமினேஷன் ப்ராசஸ் நடைபெறும்.

அந்த வகையில் இந்த வாரம் நாமினேஷன்காக கேப்ரில்லா, சோம் சேகர், நிஷா, ரம்யா பாண்டியன், ஷிவானி, ஜித்தன் ரமேஷ் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இந்த நிலையில், இந்த வாரம் சோம் சேகர் அல்லது நிஷா இவ்விரண்டு பேரில் ஒருவர் தான் பிக்பாஸ் வீட்டில் இருந்து கட்டாயம் வெளியேறுவார் என்ற தகவல் இணையத்தில் தீயாய் பரவி வருகிறது.

ஏனென்றால் நிஷா பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கப்பட்ட நாள் முதலே ரியோகாக தான் விளையாடி வருகிறார் என்ற எண்ணம் தான் ரசிகர்களிடையே மேலோங்கி உள்ளது. அதேபோல், நிஷாவும் இந்த எண்ண ஓட்டத்தை உறுதிப்படுத்தும் வகையில் தான் நடந்து கொள்கிறார்.

அதுமட்டுமில்லாமல் போன எபிசோட்ல தான் கமல் நிஷாவை தாளித்து எடுத்தார். இந்தக் காரணங்களால் நிஷா வெளியேற அதிக வாய்ப்புள்ளதாக தெரிகிறது.

மேலும் சோம், மிச்சர் திங்கிற மனுஷன் மாதிரி எதுக்குமே வாய் திறக்காம இருக்கிறாரு. இதனால் பிக்பாஸ் ரசிகர்கள் சோம் சேகர் மீது பெரும் அதிருப்தியில் இருந்து வருகின்றனர். அதுமட்டுமில்லாமல், பல இடங்களில் சோம் அர்ச்சனாவின் தலையாட்டி பொம்மை ஆகவே செயல்பட்டு வருகிறார் என்பது பலரின் ஆணித்தனமான கருத்தாக உள்ளது.

எனவே, இந்த வார இறுதியில் கண்டிப்பாக சோமசேகர் அல்லது நிஷா ஆகிய இருவரில் யாராவது ஒருவர் வீட்டை விட்டு செல்ல அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.