எச். வினோத் இயக்கத்தில் தல அஜித் காவல் துறை அதிகாரியாக நடித்து வரும் படம் வலிமை. நேர்கொண்ட பார்வை படத்தை தயாரித்து போனி கபூர் தான் வலிமை படத்தை தயாரித்து வருகிறார்.
இப்படத்தில் அஜித்துடன் இணைந்து தெலுங்கு இளம் நடிகர் கார்த்திகேயா வில்லனாகவும், பாலிவுட் நடிகை ஹுமா குரேஷி கதாநாயகியாகவும் நடித்து வருகிறார்கள்.
சமீபத்தில் தான் வலிமை படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் உள்ள பிரபல ராமோஜி ராவ் பிலிம் சிட்டியில் பிரமாண்ட செட் அமைப்பில் நடைபெற்றது. மேலும் அடுத்த கட்ட படப்பிடிப்பு அடுத்த வாரம் துவங்கவுள்ளது.
இந்நிலையில் வலிமை படத்தின் சில காட்சிகளை படத்தின் எடிட்டிங் குழு பார்த்துவிட்டார்களாம். அப்படி படத்தின் சில காட்சிகளை பார்த்த எடிட்டிங் குழு, ” படம் வேற லெவலில் இருக்கிறது. இப்படத்தின் ஒவ்வொரு காட்சிகளும் செம்ம மாஸாக இருக்கிறது. இப்படம் மட்டும் வெளியே வந்தால், இயக்குனர் எச். வினோத்தின் சம்பளம் கோடி கணக்கில் உயரும் ” என்று குறிப்பிட்டுள்ளனர்.