மாஸ்டர் படத்திற்கு பிறகு லோகேஷ் கனகராஜ் தன்னுடைய சினிமா குருவான கமலஹாசனுடன் இணைந்து விக்ரம் படத்தில் பணியாற்றுவது அனைவருக்கும் தெரிந்த விஷயம்தான்.

விக்ரம் படத்தின் டைட்டில் டீசர் வெளியாகி இணையத்தில் செம வரவேற்பைப் பெற்றது. மேலும் நெட்ப்ளிக்ஸ் தளத்தில் வெளியான ஒரு வெப் சீரிஸ் காப்பி என்ற சர்ச்சையும் கிளம்பியது.

அதனைத் தொடர்ந்து வருகிற ஜனவரியில் விக்ரம் படத்தின் படப்பிடிப்புகள் தொடங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. பிரீ புரோடக்சன்ஸ் வேலைகள் அனைத்தும் முடிந்து தற்போது படப்பிடிப்புக்கு ரெடியாக இருக்கிறார் லோகேஷ் கனகராஜ்.

வெறும் மூன்றே மாதத்தில் மொத்த படப்பிடிப்பையும் முடித்துவிட்டு ஏப்ரல் அல்லது மே மாதத்தில் விக்ரம் படத்தை வெளியிட வேண்டும் என உத்தரவிட்டுள்ளாராம். மேலும் விக்ரம் படத்தை கமல் தன்னுடைய ராஜ்கமல் பிலிம்ஸ் மூலம் தயாரிக்க உள்ளார்.

இந்நிலையில் கமல் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் கமல்ஹாசனுக்கு வில்லனாக பிரபல மலையாள நடிகர் பகத் பாசில் நடிக்க அதிக வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. மேலும் கொஞ்சமும் ஈவிரக்கமில்லாத கொடூரமான வில்லன் வேடமாம்.

பகத் பாசில் ஏற்கனவே தமிழில் வேலைக்காரன் மற்றும் சூப்பர் டீலக்ஸ் போன்ற படங்களில் நடித்திருந்தார்.