தமிழ் சினிமாவில் ஏராளமான திரைப்படங்களில் நடித்து தற்போது முன்னணி நடிகராக இருக்கும் சிம்பு, சமீபத்தில் சுசீந்திரன் இயக்கத்தில் உருவான ஈஸ்வரன் படத்தில் நடித்து முடித்துள்ளார். மேலும் இதன் டீசர் தீபாவளியை முன்னிட்டு வெளியாகி ரசிகர்களை பெருமளவில் உற்சாகப்படுத்தியது. இப்படத்தை தொடர்ந்து சிம்பு தற்போது வெங்கட்பிரபு இயக்கத்தில் உருவாகவிருக்கும் மாநாடு திரைப்படத்தின் படப்பிடிப்பில் தீவிரமாக உள்ளார்.

அரசியலை மையமாகக் கொண்ட இப்படத்தில் ஹீரோயினாக கல்யாணி பிரியதர்ஷன், பாரதி ராஜா, எஸ்.ஜே.சூர்யா, மனோஜ், உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள். சுரேஷ் காமாட்சி இப்படத்தை தயாரித்து வருகிறார். இந்நிலையில், மாநாடு படத்தின் ஷூட்டிங் தற்போது புதுச்சேரியில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

இந்த நிலையில் நடிகர் சிம்பு அசத்தலான போட்டோஷூட் நடத்தி அந்த புகைப்படங்களை தனது டுவிட்டரில் வெளியிட்டுள்ளார். அதில் அவர், கோட்ஷூட்டுடன், நீண்ட தலைமுடி, தாடியுடன் செம கெத்தாக போஸ் கொடுத்துள்ளார். இந்த புகைப்படங்கள் வைரலான நிலையில் ரசிகர்கள் அடுத்த படத்திற்கான கெட்அப்பா என கேட்டு வருகின்றனர்.