ஜகமே தந்திரம் படத்தின் டீசர் ரிலீஸ் குறித்து வெளியான மாஸ் அப்டேட் இதோ !

நடிகர் தனுஷ் நடிப்பில் இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ஜகமே தந்திரம் படத்தின் அனைத்து வேலைகளும் முடித்து ரிலீசுக்கு தயாராக உள்ளது. இந்த படம் தியேட்டரில் வெளியாகுமா இல்லை OTT தளத்தில் வெளியாகுமா என்னும் மிகப்பெரிய குழப்பம் ரசிகர்கள் மத்தியில் இருந்து வந்தது

நமக்கு கிடைத்த தகவல் படி ஜகமே தந்திரம் திரைப்படம் பிப்ரவரி மாதம் இரண்டாவது வாரம் தியேட்டர்களில்தான் வெளியாக இருக்கிறது. ஏற்கனவே இந்த படத்திலிருந்து புஜ்ஜி என்னும் பாடல் வெளியாகி இணையத்தில் பட்டைய கெளப்பி வருகிறது.

இதையடுத்து இந்த படத்தின் டீசர் என்னைக்கு ரிலீசாக போகிறது என்பதுதான் தனுஷ் ரசிகர்களின் மிகப்பெரிய கேள்வி. வருகிற பொங்கலை முன்னிட்டு இந்த படத்தின் டீசர் வெளியாக அதிக வாய்ப்பு இருப்பதாக தற்போது தகவல் வெளியாகி உள்ளது. அதிகாரப்பூர்வ தவல் வெளியானால் தனுஷ் ரசிகர்களுக்கு கொண்டாட்டம்தான்.