பிக்பாஸ் புகழ் அர்ச்சனா வீட்டில் நடந்த விசேஷம்- வைரலாகும் புகைப்படம் இதோ !

பிக்பாஸ் நிகழ்ச்சியில் வைல்ட் கார்ட் எண்ட்ரீயாக உள்ளே நுழைந்தவர் தொகுப்பாளினி அர்ச்சனா.

இவர் நிகழ்ச்சியில் சென்றதில் இருந்து கலகலப்பாக தான் இருந்தார், தற்போது அவரது குணங்கள் சில மாறிக் கொண்டே வருகின்றன.

இன்று காலையில் வந்த புரொமோவில் கூட அவர் ஏதோ ஒரு விஷயத்துக்காக கடுமையாக கோபப்படுகிறார். பிக்பாஸ் வீட்டில் இருக்கும் அர்ச்சனா வீட்டில் ஒரு சந்தோஷமாக விஷயம் நடந்துள்ளது.

அதாவது அர்ச்சனாவின் தங்கை அனிதா 5 மாதம் கர்ப்பமாக உள்ளாராம்.

5வது மாத விசேஷம் நடந்துள்ளது, அந்த புகைப்படங்களை அவர் சமூக வலைதளத்திலும் வெளியிட்டுள்ளார்.