உண்மையிலேயே பிக்பாஸ் வீட்டில் ஷனம் வெளியேறிய பின் அனிதா செய்த செயல்! அருவருப்பாக இருந்தது பிரபல நடிகை கூறிய உண்மை இதோ !

பிக்பாஸ் வீட்டில் இருந்து ஷனம் வெளியேறிய பின், அனிதா கதறி அழுத நிலையில், அதைக் கண்ட பிரபல் நடிகை ஸ்ரீப்பிரியா தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் அருவருப்பாக இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

தமிழில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் சீசன் 4 இப்போது 60 நாட்களை கடந்து சென்று கொண்டிருக்கிறது. ஆரம்பத்தில் சூடுபிக்காமல் இருந்த இந்த சீசன், இப்போது சூடு பிடிக்க துவங்கியுள்ளது.

இதற்கு முக்கிய காரணம் ஐபிஎல், ஏராளமானோர் ஐபிஎல் தொடரை பார்த்து வந்ததால், பிக்பாஸ் யாரும் அந்த பெரிதாக கண்டு கொள்ளவில்லை.

இந்நிலையில், தற்போது பலரின் கவனமும் பிக்பாஸ் பக்கம் திரும்பியுள்ளது. அதைப் பற்றி பலரும் பல்வேறு விதமான கருத்துக்களை கூறி வருகின்றனர்.

அந்த வகையில், பிக்பாஸ் வீட்டில் இந்த சீசனில் நல்ல போட்டியாளாராக இருந்த ஷனம் ஷெட்டி திடீரென்று இந்த வாரம் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டார். அவரின் இந்த வெளியேற்றம் ரசிகர்கள் பலராலும் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

இந்நிலையில் தான் ஷனம் வெளியேறிய பின் அனிதா கதறி அழுதார். ஏனெனில் அவர், ஷனம் ஷெட்டியை நாமினேட் செய்திருந்தார்.

இந்நிலையில் தான் ஷனம் வெளியேற்றப்பட்டார். இதை அறிந்தவுடன் அனிதா கட்டியணைத்து கதறி அழுதார். அடுத்த வாரம் நானும் வெளியே வந்துடுவேன் என்றும் கூறினார்.