இடியாப்ப சிக்கலில் விஜய் ! தளபதி 65 படத்தை இவர் இயக்க வாய்ப்பில்லை, காரணம் என்ன தெரியுமா ? முழு விபரம் இதோ

மாஸ்டர் படத்தை அடுத்து தளபதி விஜயின் அடுத்த படமான தளபதி 65 படத்தை இயக்குனர் ஏஆர் முருகதாஸ் இயக்குவதாக இருந்தது. ஆனால் சில கருத்து வேறுபாடுகள் காரணமாக அவரே படத்திலிருந்து வெளியேறினார்.

இதையடுத்து இந்த படத்தை இயக்குனர் நெல்சன் இயக்குகிறார் எனவும், தற்போது நெல்லசன் முழு ஸ்க்ரிப்டையும் உருவாக்கி வருவதாகவும் தகவல் வெளியானது. இந்த நிலையில் திடீரென தளபதி விஜய் அட்லியை சந்தித்துள்ளார். உடனே அட்லிதான் தளபதி 65 படத்தை இயக்க போகிறார் என தகவல்கள் வெளியானது.

ஆனால் அட்லி இந்த படத்தை இயக்க வாய்ப்பில்லையாம். காரணம் என்னவென்றால் ஏற்கனவே முருகதாஸ் சொன்ன அதிக பட்ஜெட் காரணமாகவே சன் பிக்சர்ஸ் அவரை படத்திலிருந்து நீக்கியதாகவும், இயக்குனர் அட்லியோ பட்ஜெட்டையே மீறுபவர் என்பதால் சன் பிக்சர்ஸ் இந்த கூட்டணியை ஏற்றுக் கொள்வது கடினமாம்.