அஜித்தை மறைமுகமாக சந்தித்த ஷங்கர் ! நடந்தது இது தான் ! மிரளும் திரையுலகம்

ஆக்சன் கிங் அர்ஜுன் நடிப்பில் பிரம்மாண்ட இயக்குனர் சங்கர் இயக்கத்தில் வெளியாகியுள்ள படம் முதல்வன், இந்த திரைப்படம் மக்களிடம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மிகப்பெரிய வெற்றி பெற்றது அதுமட்டுமில்லாமல் பல சாதனைகளையும் படைத்தது முதல்வர் திரைப்படம் வெளியாகி 20 ஆண்டுகள் முடிவடைந்துவிட்டது.

இந்த நிலையில் சங்கர் முதல்வன் 2 படத்திற்கான கதையை தயார் செய்து வைத்துவிட்டார், இப்பொழுது சங்கர் கமல்ஹாசனை வைத்து இந்தியன்2 திரைப்படத்தை இயக்கி வருகிறார். இந்தியன் 2 திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிந்தவுடன் முதல்வன் இரண்டாம் பாகத்திற்கான படப்பிடிப்பு வேலைகள் துவங்க இருக்கிறதாம்.

முதல்வன் 2 படத்தில் தளபதி விஜய் தான் நடிக்க இருக்கிறார் என்று பல வதந்திகளும் பரவியது. இந்த நிலையில் இப்போது வெளியாகி இருக்கும் செய்தி என்னவென்றால் முதல்வன் 2 படத்தின் கதையை இயக்குனர் ஷங்கர் தல அஜித்திடம் கூறியுள்ளாராம். தல அஜித்துக்கும் முதல்வன் 2 படத்தின் கதை மிகவும் பிடித்துவிட்டது.

இப்போது தல அஜித் வினோத் இயக்கத்தில் வலிமை படத்தில் நடிக்க இருப்பதால் தல அஜித் ஷங்கரிடம் பிறகு பார்த்துக் கொள்ளலாம் என கூறியிருப்பதாக நம்பத் தகுந்த சினிமா வட்டாரங்களில் இருந்து தகவல் வெளியாகி உள்ளது. அநேகமாக முதல்வன் 2 படம் தல 61 படமாகத்தான் இருக்க அதிக வாய்ப்புகள் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அதற்கு காரணம் தல அஜித் சமூக அக்கறை கொண்ட படங்களை மட்டும் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.

அதனால் ஷங்கரின் முதல்வன் 2 படத்தில் தல அஜித் நடிக்க அதிக வாய்ப்பு இருப்பதாகவும் நம்பத்தகுந்த சினிமா வட்டாரங்களில் இருந்து தகவல் வெளியாகி உள்ளது. வெளியாகி இருக்கும் இந்த தகவலை கேட்டு உடனே சில தல ரசிகர்கள் முதல்வன் 2 என்ற டைட்டிலில் தல அஜித்தின் போட்டோவை வைத்து செம மாஸாக ஒரு ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை தயார் செய்து சமூக வலைதளங்களில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.