நடிகர் ரஜினிகாந்த் கட்சி துவங்குவது குறித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ளார்.

அண்ணல் அம்பேத்கரின் 64 ஆம் ஆண்டு நிளைவுநாளை முன்னிட்டு நாம் தமிழர் கட்சி சார்பில் நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது.

இந்நிகழ்வுக்கு தலைமை தாங்கிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கணைப்பாளர் சீமான், அம்பேத்கரின் படத்திற்கு மலர் தூவி மாரியாதை செலுத்தினார்.

இதன் பின் செய்தியாளர்களை சந்தித்த சீமான், ரஜினிகாந்த கட்சி துவங்குவது குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்தார்.

ரஜினி மக்கள் மன்றம் வைத்திருக்கும் நடிகர் ரஜினிகாந்த, ஏன் மக்கள் மன்ற நிர்வாகிகள் ஒருவரை கூட கட்சியின் முக்கிய பொறுப்பாளர்களாக நியமிக்கவில்லை என சீமான் கேள்வி எழுப்பினார்.

முன்னாள் பாஜக நிர்வாகி அர்ஜுனமூர்த்தியை வைத்துக்கொண்டு ரஜினி சாதி மத உணர்வற்ற அரசியலை எப்படி கொடுப்பார்.

ஜெயலலிதா, கருணாநிதி இருக்கும் போதே விஜயகாந்த் நாங்களெல்லாம் கட்சி தொடங்கினோம். ரஜினி ஒரு கோழை, வீரன் என்றால் எதிரியுடன் நேராக மோத வேண்டும். அந்த வகையில் விஜயகாந்த் வீரர்.

பாஜக கொடுத்த அழுத்தத்தால் தான் ரஜினி கட்சி துவங்குகிறார். தமிழகத்தில் ரஜினியுடைய தேவை இல்லை.

வேளாண் சட்டம், நீட் தேர்வு உள்ளிட்டவற்றில் ரஜினியின் நிலைப்பாடு என்ன? திரையில் நடிப்பதின் மூலம் மட்டும் நாட்டை ஆள்வதற்கு தகுதி வந்துவிடுகிறதா?

ரஜினி மட்டுமல்ல யார் வந்தாலும் நாங்க்ள எதிர்கொள்வோம், எதிர்த்து போட்டி போடுவோம் என சீமான் தெரிவித்துள்ளார்.