பிக்பாஸ் நிகழ்ச்சி பல திருப்பங்களுடன் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் கடுமையான போட்டியாக கருதப்பட்ட நடிகை சனம் போட்டியில் இருந்து வெளியேறியது ரசிகர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது. காரணம் மனதில் பட்டதை நேர்மையாகவும் தைரியமாகவும் கூறும் பழக்கம் உடையவர் சனம் செட்டி. இதனால் அந்த வீட்டில் சிலரது எதிர்ப்பை சம்பாதித்தாலும், மக்கள் அவரை பல சமயங்களில் பாராட்டி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து நேற்றைய தினம் சமூக வலைதளங்களில் #NoSanamNoBiggboss என்ற ஹேஷ்டேக் வைரலானது.

இந்நிலையில் அவர் ஓட்டுகள் குறைவாக பெற்றதன் அடிப்படையில் நேற்றைய தினம் வெளியேறியது குறித்து பிரபல விஜய் டிவி தொகுப்பாளர் மற்றும் இசையமைப்பாளரான ஜேம்ஸ் வசந்தன் தற்போது கருத்து வெளியிட்டுள்ளார். அவர் நேற்றைய தினம் கூறும் பொழுது “நான் கேள்விப்பட்டது உண்மையா. இது உண்மையாக இருந்தால் நான் பிக்பாஸ் பார்ப்பதையே நிறுத்தி விடுவேன். இது நியாயம் இல்லை. நான் இதை ஏற்றுக்கொள்ள மாட்டேன். கோடிக்கணக்கான ரசிகர்களை ஏமாற்றும் வேலை” என்று கூறியுள்ளார்.

இந்நிலையில் சனத்தின் வெளியேற்றத்தை தாங்கமுடியாமல் அனிதா சம்பத் கதறி அழுதார். மேலும் அவரிடம் மன்னிப்பும் கேட்டார். ‘கடந்த ஒரு வாரமாக நாங்கள் இருவரும் பேசிக் கொள்ளவில்லை. அவர் இந்த வாரம் வெளியேறுவார் என்று எனக்கு தெரியாது என்பதுபோல் போட்டியாளர்களிடம் அழுதார். இந்நிலையில் அனிதாவின் கணவர் தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு பதிவிட்டுள்ளார். அதில் “இது நியாயம் இல்லை” என்று கூறியுள்ளார்.