கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் வெளியான தகவல்கள் இன்று உண்மையாகி விட்டது. சனம் பிக்பாஸ் வீட்டைவிட்டு வெளியேறி விட்டார். ஆரி, ரம்யா பாண்டியன், சனம், அனிதா, ஷிவானி, நிஷா, ஆஜீத் ஆகியோர் கடந்த வாரம் நாமினேஷனில் இடம் பிடித்தனர். இதில் நேற்று ஆரி, ரம்யா பாண்டியன் இருவரும் டெலிகாலர் டாஸ்க் பாணியில் காப்பாற்றப்பட்டனர்.

இன்று நிஷா, ஆஜீத்தை அடுத்தடுத்து கமல் காப்பாற்றினார். கடைசியில் அனிதா, ஷிவானி, சனம் ஆகியோர் மட்டுமே எஞ்சி இருந்தனர். இதனால் இவர்கள் மூவரில் யார் வெளியேறுவார்? என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்தது. அதிக நேரம் காக்க வைக்காமல் சனம் வெளியேறியதாக கமல் அறிவித்தார். இதைக்கேட்டு ரசிகர்கள் மட்டுமின்றி சக போட்டியாளர்களும் அதிர்ச்சி அடைந்தனர்.

இந்த நிலையில் அனிதாவுக்கு தான் குறைவான வாக்குகள் கிடைத்ததாகவும் ஆனால் அவர் கண்டெண்ட் கொடுப்பார் என பிக்பாஸ் நம்புவதால், சனம் வெளியேறியதாகவும் கூறப்படுகிறது. மிகவும் வலிமையான போட்டியாளராக உருவெடுத்து வந்த சனம் கண்டிப்பாக இறுதிப்போட்டிக்கு முன்னேறுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவரது வெளியேற்றம் உண்மையிலேயே அனைவருக்கும் அதிர்ச்சி அளித்துள்ளது.

ரசிகர்கள் மட்டுமின்றி பிரபலங்களும் அவருக்கு ஆதரவாக கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். ஆரம்பத்தில் தன்மீது வைக்கப்பட்ட விமர்சனங்களை நேர்மறையாக மாற்றி, ரசிகர்களின் இதயங்களை வென்று இந்த நிகழ்ச்சியில் இருந்து சனம் வெளியேறி இருப்பது குறிப்பிடத்தக்கது. சனம் ஷெட்டியின் செகண்ட் இன்னிங்ஸ் நன்றாக அமைய வாழ்த்துக்கள்!