இதுவரை யாரும் செய்யாத வேலையை செய்துள்ள ரஜினி! பொங்கியெழுந்த பிரபலம்! கடும் விமர்சனம்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த தான் டிசம்பர் 31 ல் கட்சி தொடங்கும் தேதியை அறிக்கவுள்ளதாக கூறியுள்ளார். 2021 ல் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவேன் என முன்பே கூறியது போல தற்போது அதற்கான செயல்களில் முழுமையாக ஈடுபட்டுள்ளார்.

தமிழருவி மணியன் மற்றும் அர்ஜூன மூர்த்தி ஆகியோரை தன் கட்சியில் முக்கிய பொறுப்பில் நியமித்துள்ளார்.

இந்நிலையில் இருவரும் சென்னை போயஸ் கார்டனில் ரஜினியுடன் பேச்சு வார்த்தை நடத்தினார்கள். .

டிசம்பர் 31ல், கட்சி தொடங்கப்படும் தேதியை ரஜினி அறிவிப்பார் என்றும், கட்சியின் பெயர், சின்னம் உள்ளிட்டவை குறித்து ஆலோசித்துள்ளதாகவும் தெரிவித்தார். கட்சி தொடர்பான அனைத்து தகவல்களும், ரஜினி மூலமாகவே அறிவிக்கப்படும் என்றும், முதல்வர் வேட்பாளர் குறித்து பேசவில்லை என்றும் தமிழருவி மணியன் கூறினார்.

ரஜினி கட்சி தொடங்கினால் தங்களுக்கு பாதிப்பில்லை என திமுகவும், அதிமுகவும் கூறுவது பற்றி செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, பாதிப்பில்லை என்று அவர்கள் கூறுவதில் இருந்தே, பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்பது தெரியவருவதாக கூறினார்.

மேலும் உலகில் யாரும் செய்யாத வேலையை ரஜினி செய்துள்ளதாகவும், அவரது அரசியலை மக்கள் ஏற்க மாட்டார்கள் என்றும் மூத்த அரசியல்வாதி நாஞ்சில் சம்பத் தெரிவித்துள்ளார். ஆன்மீக அரசியல் என்பது, பாசிச அரசியல் எனவும், அது வெறுப்பு அரசியல் என்றும் நாஞ்சில் சம்பத் விமர்சித்துள்ளார்.