என்னுடைய அனைத்து ஓட்டுகளுமே இனி ரஜினிக்கு தான்…ரஜினிக்கும் ஆதரவாக பேசிய பிரபலம்…குவியும் பாராட்டுக்கள்

ரஜினியின் கட்சியின் பெயர் அறிவிப்பதற்கு முன்பே அவருக்கு ஆதரவுகள் குவிந்து வருவதாக, மற்ற கட்சிகள் சற்று ஒரு வித கலக்கத்தில் இருப்பதாக கூறப்படுகிறது.

கடந்த 2017-ஆம் ஆண்டு கட்சி குறித்து விரைவில் அறிவிப்பேன், வரும் சட்டமன்ற தேர்தலுக்கு முன் என்னுடைய அறிவிப்பு வரும் என்று ரஜினி அன்றே கூறியிருந்தார்.

ஆனால், அதன் பின் ரஜினி எந்த ஒரு சரியான அறிவிப்பும் இல்லாமல் மக்கள் மற்றும் ரசிகர்களை குழப்பி வந்தார். இதனால் ஒரு சில அரசியல் கட்சியை சேர்ந்தவர்கள், அவர் அரசியலுக்கு எல்லாம் வரமாட்டார், அவருடைய படம் வரும் நேரத்தில் அரசியலைப் பற்றி பேசி ஓடிவிடுவார் என்று விமர்சித்தனர்.

ஆனால், விமர்சித்தவர்களின் வாய்ப்பு பூட்டு போடும் வகையில், சில தினங்களுக்கு முன்பு தன்னுடைய டிசம்பர் 30-ல் கட்சியைப் பற்றிய அறிவிப்பும் என்று அறிவித்தார்.

அதுமட்டுமின்றி, நான் நிச்சயமாக முதல்வர் வேட்பாளர் இல்லை என்பதில் திட்டவட்டமாக இருக்கிறார். இந்நிலையில் கட்சி பெயர் அறிவிப்பதற்கு முன்பே திரைப்பிரபலங்கள் பலரும் ரஜினிக்கு தங்கள் ஆதரவை தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில், பிரபல இயக்குனரான கார்த்திக் சுப்புராஜ் என்னுடைய ஓட்டு ரஜினிக்கு தான் என்று வெளிப்படையாக கூறியுள்ளார். இதனால் கட்சி துவங்குவதற்கு முன்பே ஆதரவு குவியத் துவங்கியுள்ளது.