இன்று உலக எய்ட்ஸ் தினமாகும். ஒவ்வொரு வருடமும் டிசம்பர் 1 ஆம் தேதி உலக எய்ட்ஸ் தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

எய்ட்ஸ் என்பது ஓர் உயிர்க்கொல்லி நோய், நோய் ஒருமுறை வந்துவிட்டால் குணப்படுத்த முடியாது.

நம் உடலில் உள்ள நோய் எதிர்ப்பு தன்மையை முற்றிலும் அழித்து கடைசியில் மரணத்தையை பரிசாக தந்துவிடுகின்றது. இருப்பினும் இது குறித்து விழிப்புணர்ப்பு இன்றுவரை சில மக்களுக்கு இல்லை.

உண்மையில் இதுபற்றிய விழிப்புணர்வு ஒவ்வொரும் தெரிந்து வைத்திருப்பது அவசியமானது ஆகும்.

அந்தவகையில் தற்போது எச்.ஐ.வி-யின் ஆரம்ப கால அறிகுறிகள் என்ன? இதனை தடுக்க என்ன செய்யலாம்? என்பதை பற்றி பார்ப்போம்.

ஆரம்ப அறிகுறி என்ன?
வழக்கத்தை விடவும் வேகமாக உடல் எடை குறைவது எச்.ஐ.வி-யின் அறிகுறிகளில் ஒன்றாகும். எடை குறைவது இந்நோயின் முன்னேற்றத்தை குறிப்பதாக இருக்கும்.
தொடர்ச்சியான இருமல் எச்.ஐ.வி நோயின் அறிகுறியே. ஆனால், குப்பைகளை சுவாசிப்பதால் ஏற்படும் அலர்ஜியாகவும் கூட இது இருக்கலாம். எனினும், தொடர்ந்து வரும் காலங்களில் எச்.ஐ.வி வளர்ந்து வந்தால், இருமலும் அதிகரிக்கும்.
எச்.ஐ.வி கிருமியின் பாதிப்பை உங்கள் நகங்களில் கண்டறிய முடியும். நகம் பிரிவதும், அவற்றின் வண்ணங்கள் குறைவதும் இதன் ஒரு பகுதியாகும். எனவே, இந்த அறிகுறியை கண்டால் பரிசோதனை செய்து கொள்ளவும்.
நாட்களின் பெரும்பாலான நேரங்கள் நீங்கள் மந்தமாகவும், சோர்வாகவும் இருப்பதாக உணர்ந்தால், அதனை எச்.ஐ.வி பாதிப்பாக கருத முடியும். எச்.ஐ.வி-வின் ஆரம்ப கால அறிகுறிகளில் ஒன்றாகவே இந்த களைப்பு நிலை உள்ளது.
உங்களுடைய தசைகள் மற்றும் மூட்டுகளில் தாங்கவொண்ணாத வலிகள் இருந்தால், எச்.ஐ.வி பரிசோதனை செய்து கொள்ளுங்கள். இதுவும் எச்.ஐ.வி-ன் அறிகுறிதான்.
தலைவலி உங்கள் வாழ்க்கையின் ஒரு அங்கமாகவே மாறி விட்டால், அதனையும் எச்.ஐ.வி பாதிப்பின் அறிகுறியாக கருதலாம்.
எச்.ஐ.வி நோயின் ஆரம்ப மற்றும் முற்றிய நிலைகளில் தோல் சொரசொரப்பாக மாறிவிடும். இதனால் உங்கள் தோலில் எரிச்சல் மற்றும் அரிப்பு மிக்க பகுதிகள் உருவாகின்றன. எனவே, உங்கள் தோலை சற்றே நெருக்கமாக கவனிக்கவும்.
எய்ட்ஸ் நோய் எவ்வாறு பரவுகிறது?
எச்.ஐ.வியால் பாதிக்கப்பட்டவருடன் உடலுறவு கொள்வதால் நோய் தொற்றுகிறது.

எச்.ஐ.வி வைரஸ் பாதிக்கப்பட்டவருக்கு பயன்படுத்தப்பட்ட ஊசி, மருந்து, ஊசி குழல் போன்றவற்றை இன்னொருவர் பயன்படுவதன் மூலம் எய்ட்ஸ் வேகமாக பரவுகிறது.

குறிப்பாக ரத்தத்தின் மூலம் வேகமாக பரவுகிறது. பாதுகாப்பற்ற முறையில் உடலுறவு மேற்கொள்ள வேண்டும்.

எய்ட்ஸ் நோய் வராமல் தடுப்பது எப்படி ?
தகாத உடலுறவு கொள்வதை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.
பாதிக்கப்பட்டவருக்கு பயன்படுத்தப்பட்ட ஊசியை இன்னொருவருக்கு பயன்படுத்த கூடாது.
இரத்த தானம் வழங்குவதிலும், பெறுவதிலும் கவனமாக இருக்க வேண்டும்.
எய்ட்ஸ் பாதிக்கப்பட்ட நபர்கள் செய்யக் கூடாதவை
பாதுகாப்பற்ற உடலுறவு
இரத்தம், விந்து, உடல் உறுப்புகளைத் தானம் செய்தல்
பிளேடு, பல் துலக்கும் குச்சி, பிரஸ் இவைகளை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளக் கூடாது
போதை ஊசி பழக்கம் கொண்டவர்கள், ஊசிகளை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளக் கூடாது
காது குத்துதல், பச்சை குத்துவது அதற்கு பயன்படும் உபகரணங்களை சுகாதாரமின்றி மீண்டும் மீண்டும் பயன்படுத்தக்கூடாது