இந்த ஒரு காரணத்தினால் OTT-யில் வெளியாகிறதா சிம்புவின் ஈஸ்வரன் ? வெளியான தகவலால் அதிர்ச்சியில் ரசிகர்கள், நடந்தது என்ன ?

நடிகர் சிம்பு நடிப்பில் இயக்குனர் சுசீந்திரன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் திரைப்படம் ஈஸ்வரன். இந்த படம் குடும்பத்துடன் அனைவரும் பார்க்க கூடிய கமர்ஷியல் திரைப்படமாக உருவாகி உள்ளது. படப்பிடிப்பு முழுவதுமாக முடிந்து போஸ்ட் ப்ரொடக்ஷன் வேலைகள் தற்போது நடைபெற்று வருகிறது.

சமீபத்தில் இந்த படத்தின் டீசர் வெளியாகி சிம்பு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றிருந்தது. இந்த நிலையில் இந்த திரைப்படம் OTT தளத்தில் வெளியாகிறதா என்ற ஒரு கேள்வி இணையதளத்தில் பரவி வருகிறது.

அதன்படி முன்னணி ஓடிடி நிறுவனம் ஒன்று படக்குழுவை தொடர்பு கொண்டு பேசியதாகவும், ஆனால் படக்குழு அதற்கு மறுப்பு தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் இப்போதைக்கு ஈஸ்வரன் திரைப்படத்தை தியேட்டரில்தான் வெளியிட வேண்டும் என்பதில் படக்குழுவினர் உறுதியாக இருக்கிறார்களாம்.