முரட்டு போதையில் போலீஸாரிடம் ஆபாசமாக பேசி அசிங்கமாக நடந்து கொண்ட இளம் பெண்! வைரலாகும் சர்ச்சைக்குரிய காட்சி

சென்னை திருவான்மியூர் பேருந்து நிலையத்தின் பின்புறம் உள்ள சவுத் அவென்யூ சாலையில் போலீஸார் வேகமாக சென்ற காரை மடக்கி, ஆண் நண்பருடன் கார் ஓட்டிக்கொண்டு வந்திருந்த இளம் பெண்ணிடம் மது அருந்தியுள்ளாரா என சோதனையிட்டனர்.

அப்போது காரில் இருந்து இறங்கி வந்த அப்பெண், தடாலடியாக போலீஸாரிடம் சரமாரியாக பேசி உதைக்க முற்பட்டார்.

மேலும் அப்பெண், ஆபாச வார்த்தைகளால் போலீஸாரை தரக்குறைவாக வசைபாடி பேசினார்.

மீடியாவில் இருப்பதாக மிரட்டிய அப்பெண்ணை நீண்ட நேரமாக போலீஸார் சகித்துக் கொண்டனர்.

பின்னர் போலீஸாரோ, ‘போலீஸாரின் சோதனைக்கு கொஞ்சம் ஒத்துழையுங்கள் மேடம்’ என்று மரியாதையாகக் கூறுகின்றனர். இந்த சம்பவம் வலைதளங்களில் வீடியோவாக வைரலாகி வருகிறது.