சமீபகாலமாக நடிகைகள் பலரும் சீனியர் நடிகர்களுடன் நடிப்பதை தவிர்த்து வருகின்றனர். அதற்கு காரணம் படப்பிடிப்பு தளங்களில் அவர்கள் மிகவும் கடுமையான முறையில் நடந்து கொள்வதுதான் என செய்திகள் வெளிவந்த வண்ணம் உள்ளன.

அந்தவகையில் தெலுங்கு சினிமாவில் பிரபல நடிகராக இருப்பவர் பாலகிருஷ்ணா. 60 வயதை கடந்தும் ஹீரோவாகத்தான் நடிப்பேன் என தொடர்ந்து சொந்த காசில் சூனியம் வைத்துக் கொள்கிறார். கடைசியாக அவர் நடித்த எந்த படமும் ஓடவில்லை.

இருந்தாலும் வருடத்திற்கு ஒரு படம் என தொடர்ந்து நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார். அந்தவகையில் அடுத்ததாக அவர் நடிக்கும் புதிய படம் ஒன்றுக்கு ஹீரோயின்கள் தேடி வருகின்றனர்.

ஏற்கனவே பாலிவுட் நடிகை சோனாக்ஷி சின்கா ஒப்பந்தம் செய்யப்பட்ட பின்னர் விலகிக் கொண்டார். அதனைத் தொடர்ந்து நடிகை ஸ்ரேயா, சாயிஷா, அஞ்சலி ஆகியோரும் பாலகிருஷ்ணா படப்பிடிப்பு தளத்தில் நடந்து கொள்வதை கேள்விப்பட்டு ஓட்டம் பிடித்து விட்டனர்.

பாலகிருஷ்ணா கோபத்தை கட்டுப்படுத்த முடியாதவராம். யாராவது படப்பிடிப்பு தளத்தில் தப்பு செய்து விட்டால் உடனே அந்த இடத்திலேயே அவரை அடித்து விடுவாராம். மேலும் கடுமையான சொற்களில் திட்டி நார் நாராய் கிழித்து விடுவாராம்.

இது அங்கிருக்கும் தொழிலாளர்களுக்கு மட்டுமல்ல. சில சமயம் நடிகர் நடிகைகளுக்கும் கூட அந்த மாதிரி நடந்து இருக்கிறதாம். இதனைப்பற்றி தெலுங்கு சினிமாவில் பரப்பி விட, தற்போது பாலகிருஷ்ணா படங்களில் நடிக்க நடிகைகள் தயங்கி வருகின்றனர்