சூர்யாவை ஓரம்கட்டிவிட்டு விக்ரமை கமிட் செய்த பிரபல இயக்குனர்…ஓஹோ இதுதான் காரணமா? உண்மையை கூறிய டாப் நடிகர்

ஸ்டூடியோ க்ரீன் தயாரிப்பில் ஹரி இயக்கத்தில் சூர்யா நடிக்கவிருந்த திரைப்படம் தான் அருவா. ஆனால் சில கருத்து வேறுபாடு காரணமாக இப்படத்தில் இருந்து விலகிவிட்டார் நடிகர் சூர்யா.

அதன்பின் விக்ரமுடன் கைகோர்த்துள்ளார் இயக்குனர் ஹரி என தகவல் வெளியானது. ஆனால் அப்படத்தின் தலைப்பு என்ன? அப்படத்தின் விவரங்கள் என்னென்ன என்று வெளியாகவில்லை.

இந்நிலையில் அருவா படத்தில் கதாநாயகியாக இளம் நடிகை ராஷி கன்னா கமிட்டாகி இருந்தார். அப்படம் ட்ராப் ஆகிவிட்டதால், விக்ரமுடன் ஹரி இணையும் இப்படத்தில் நடிகை ராஷி கன்னாவை கமிட் செய்துள்ளாராம் ஹரி.

இதனால் சூர்யாவிற்கு சொன்ன அருவா படத்தின் அதே கதையை சொல்லி, நடிகர் விக்ரமை இப்படத்தில் கமிட் செய்துள்ளார் ஹரி என கோலிவுட் வட்டாரத்தில் கிசுகிசுக்கப்படுகிறது,

எதுவாகினும் நாம் பொறுத்திருந்து பார்ப்போம் அதிகாரப்பூர்வ அறிவிப்பிற்காக.