பிக்பாஸ் நிகழ்ச்சி பல திருப்பங்களுடன் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் கடந்த வாரம் நடந்த கால்சென்டர் டாஸ்க் இந்த வாரமும் நடந்தது. அதில் பலர் தங்களுக்கு விருப்பமான போட்டியாளர்கள் செய்த காலை தாங்களே கட் செய்தனர். ஆனால் சிலர் விடாப்பிடியாக விளையாட்டை சிறப்பாக விளையாடினர். இந்நிலையில் போட்டியாளர்கள் தங்களை வரிசைப்படுத்த வேண்டும் என்று பிக் பாஸ் புதிய சூழ்ச்சியை தொடுக்க. போட்டியாளர்கள் ஒருவருக்கொருவர் அடித்துக் கொள்வதையும் காணமுடிந்தது.

இந்நிலையில் தற்போது ஒரு செய்தி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அதாவது சனம் இந்த வாரம் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறி விட்டதாக கூறபடுகிறது. பிக்பாஸ் நிகழ்ச்சியில் மனதில் பட்டதை மறைக்காமல் பேசும் பழக்கம் உடையவர்களாக ஆரி, சனத்தின் பெயர்கள் ரசிகர்கள் மத்தியில் பரவி வந்தது. இந்நிலையில் இந்த செய்தியை கேட்டு ரசிகர்கள் ஷாக்காகி உள்ளனர். ஆனாலும் இது எந்த அளவில் உண்மை என்பதை நாம் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.