60 வயதிலும் சல்மான்கான் சிங்கிளாக இருக்க காரணம் என்ன தெரியுமா? எல்லாம் அந்த நடிகையின் காதல் தான்!

இந்திய சினிமாவின் சூப்பர் ஸ்டாராக இருப்பவர் சல்மான் கான். இவருக்கு 54 வயது ஆகியும் தற்போது வரை திருமணம் செய்யாமல் சிங்கிளாகவே இருந்து வருகிறார்.

சல்மான்கான் தனது இளம் வயதில் பல நடிகைகள் மீது காதலில் விழுந்துள்ளார். ஏன் உலக அழகி ஐஸ்வர்யா ராயின் முன்னாள் காதலரும் சல்மான் கான் தான்.

இந்திய சினிமாவின் ஆணழகன் என்ற பட்டத்துடன் வலம் வரும் சல்மான் கான் தற்போது வரை திருமணம் செய்து கொள்ளாமல் இருப்பதற்கு ஒரு நடிகையின் மீது இருந்த தீவிர காதல் தான் என தகவல்கள் கிடைத்துள்ளது.

சல்மான்கான் மற்றும் ஐஸ்வர்யா ராய் ஆகிய இருவரும் காதலித்தது உலகத்திற்கே தெரியும். ஆனால் இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக ஐஸ்வர்யாராய் அபிஷேக் பச்சனை திருமணம் செய்து கொண்டு செட்டிலாகிவிட்டார்.

ஆனால் ஐஸ்வர்யா ராய்க்கு முன்னரே ரேகா என்ற நடிகை மீது சல்மான் கானுக்கு ஒரு கிரஷ் இருந்ததாம். ரேகா எங்கு சென்றாலும் அவரை பின்தொடர்ந்து சென்று கொண்டே இருப்பாராம் சல்மான் கான்.

ஒரு பேட்டியில் ரேகாவை திருமணம் செய்துகொள்ள ஆசைப்பட்டு நடக்காததால் தான் தற்போது வரை தான் சிங்கிளாக இருப்பதாக தெரிவித்துள்ளார். ஆனால் அதற்கு முன்பே சங்கீதா என்ற நடிகையுடன் பல வருடங்களுக்கு முன்பு சல்மான் கானுக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டு பத்திரிக்கை அடிக்கப்பட்டதாம்.

ஆனால் ரேகாவுடன் இருந்த தொடர்பு காரணமாக சங்கீதா அந்த கல்யாணத்தை நிறுத்தி விட்டாராம். சிங்கிள்னு சொல்றவங்கள நம்பவே கூடாது என்பதற்கு உதாரணம் நம்ம சல்மான் கான் தான்.