சிக்கலில் இந்தியா ! அவுஸ்திரேலியாவுக்கு எதிரான டி-20 தொடரிலிருந்து நட்சத்திர வீரர் விலகல்.. இளம் வீரருக்கு வாய்ப்பு

அவுஸ்திரேலியாவுக்கு எதிரான டி-20 தொடரிலிருந்து காயம் காரணமாக இந்திய நட்சத்திர வீரர் ரவீந்திர ஜடேஜா விலகியுள்ளார்.

அவுஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, முன்னதாக 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரை 2-1 என்ற கணக்கில் இழந்தது.

இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையேயான முதல் டி-20 கான்பெர்ராவில் நடைபெற்றது. டி-20 தொடரை கைப்பற்றி அவுஸ்திரேலியாவுக்கு பதிலடி கொடுக்க வேண்டும் என்ற முனைப்புடன் களமிறங்கிய இந்திய அணி, ஜடேஜா அதிரடி மற்றும் நடராஜன், சாஹல் பந்துவீச்சால் 11 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிப்பெற்றது.

இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட டி-20 தொடரில் 1-0 என இந்தியா முன்னிலைப்பெற்றுள்ளது.


பேட்டிங் செய்யும்போது இந்திய வீரர் ஜடேஜா காயமடைந்தார். முதலில் அவருக்கு முழங்கால் தசைப்பிடிப்பு ஏற்பட்டது. அதன்பின் மிட்செல் ஸ்டார்க் வீசிய பவுன்சர் பந்து ஹெல்மெட்டை தாக்கியது. ஆனாலும் அவர் அதிரடியாக விளையாடி ரன்களை சேர்த்தார்.

இந்த நிலையில் காயம் காரணமாக அவுஸ்திரேலியாவுக்கு எதிரான டி-20 தொடரில் இருந்து இந்திய அணி வீரர் ஜடேஜா விலகியுள்ளார்.

மீதமுள்ள இரண்டு டி20 போட்டியில் இருந்து ஜடேஜா விலகியுள்ளார். அவருக்குப் பதிலாக ஷர்துல் தாகூர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.