தமிழ் சினிமாவில் வெற்றிவேல், கிடாரி, தம்பி உள்ளிட்ட சில படங்களில் நடித்தவர் நிகிலா விமல். கேரள மாநிலத்தை சேர்ந்த இவர் அழகானவர் மட்டுமில்லாமல் திறமையாக நடிக்கவும் கூடியவர். இவர் நடித்த திரைப்படங்களில் அதை அவர் நிரூபித்துள்ளார். தமிழில் மட்டுமில்லாமல் மலையாளத்தில் அவர் தொடர்ந்து நடித்து வருகிறார்.

இந்நிலையில், அவரின் தந்தை பவித்ரன் சமீபத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். ஆனால், சிகிச்சை பலனின்றி அவர் இன்று திடீரென ஏற்பட்ட மாரடைப்பில் உயிரிழந்தார்.

கேரளாவில் கொரோனா வைரஸ் பரவ துவங்கிய போது கொரோனா குறித்த விழிப்புணர்வுகளை மக்களுக்கு ஏற்படுத்தும் அரசு கால் செண்டரில் நிகிலா இலவசமாக பணிபுரிந்தார். எனவே, அவரது வீட்டிலா இப்படி ஒரு சோகம் என ரசிகர்கள் அவருக்கு ஆறுதலும், அவரின் தந்தையின் மறைவுக்கு இரங்கலும் தெரிவித்து வருகின்றனர்.