ரூ.1295 கோடி மதிப்பில் அம்ரூட் குடிநீர் திட்டம் -அடிக்கல் நாட்டிய முதல்வர்

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மக்களின் தேவையை புரிந்து சிறப்பான ஆட்சியை செய்து வருகிறார். மக்களுக்கு நன்மை தரும் வகையில் பல நடவடிக்கைகள் மற்றும் திட்டங்களை அமுல்படுத்தி வருகிறார்.

ஏற்கனவே நீர் மேலான்மையை கடைபிடித்ததில் தமிழகம் முதலிடம் வகிப்பதாக மத்திய அரசு பெருமைப்படுத்தியது. மேலும், இந்தியன் டுடே பத்திரிக்கையும் தமிழகத்தை சிறந்த மாநிலமாக தேர்ந்தெடுத்துள்ளது மேலும், நிவர் புயலை சரியாக கையாண்ட காரணத்திற்காக பிரதமர் மோடியின் பாராட்டை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பெற்றுள்ளார்.

இந்நிலையில், மதுரையில் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற விழாவில் ரூ.1,295 கோடி மதிப்பீட்டில் அம்ரூட் குடிநீர் திட்டத்திற்கு இன்று அடிக்கல் நாட்டினார். அம்ரூட் குடிநீர் திட்டம் 2023ம் ஆண்டு டிசம்பரில் பயன்பாட்டிற்கு வரவுள்ளது.

இந்த விழாவில் பேசிய முதல்வர் மதுரையில் 1.10 லட்சம் கூடுதல் குடிநீர் இணைப்புவழங்கப்படும் என தெரிவித்தார். மேலும், தமிழகம் முழுவதும் 76 கூட்டு குடிநீர் திட்டம் செயல்படுவதாகவும்,40 லட்சம்புதிய குடிநீர் இணைப்பு வழங்க அரசு திட்டமிட்டு, தற்போது 7 லட்சம் புதிய குடிநீர் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

மேலும், முல்லை பெரியாறு அணையில் இருந்து மதுரைக்கு குடிநீர் கொண்டு அம்ரூட் குடிநீர் திட்டம் 2030ம் ஆண்டு முடிவடையும் எனவும் , இதன் மூலம் மதுரையில் 1.10 லட்சம் கூடுதல் குடிநீர் இணைப்புகள் வழங்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

முதல்வர் பழனிச்சாமியின் இந்த அறிவிப்பு மதுரை வாசிகளுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.