எத்தனை முறை கூறினாலும் புரிய மாட்டேங்குது ? கமல் சொல்வது யாரை தெரியுமா? நீங்களே பாருங்க

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் நான்காவது சீசன் 61 நாட்களை நிறைவு செய்து இருக்கிறது. இதுவரை ரேகா, வேல்முருகன், சுரேஷ் சக்ரவர்த்தி, சுசித்ரா ரேகா, வெளியேறிய நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை சம்யுக்தா வெளியேறி இருந்தார். மற்ற போட்டியாளர்கள் வெளியேறியதைவிட சம்யுக்தாவின் வெளியேற்றம் தான் கொஞ்சம் பரபரப்பாக பேசப்பட்டது. அதற்கு முக்கிய காரணமே இவர் வெளியேறுவதற்கு முன்பாக இவருக்கு குறும்படம் போடப்பட்டு இருந்தது.


பிக் பாஸின் நேற்றய நிகழ்ச்சியில் டாஸ்க் ஒன்றை கொடுத்திருந்தார் கமல். இந்த டாஸ்க் மூலம் போட்டியாளர்களை வச்சி செய்தார் பிக் பாஸ். இந்த டாஸ்கில் எந்த பிக் சொன்ன காரணத்தையும் பிக் பாஸ் ஏற்கவில்லை. இதனால் போட்டியாளர்களே தாங்கள் இந்த 60 நாட்களில் மக்களுக்கு சொன்ன கருத்து என்ன என்பது தெரியாமல் குழம்பி போனார்கள். இந்த டாஸ்க் மூலம் பிக் பாஸ் என்ன பதிலை எதிர்பார்க்கிறார் என்று ரசிகர்களுக்கு கூட புரியாமல் தான் இருந்து வருகிறது. பொதுவாக சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் கமல் வருவதால் நிகழ்ச்சி கொஞ்சம் சுவாரசியமாக இருக்கும்.மேலும், அந்த வாரம் முழுவதும் நடைபெற்ற பிரச்சினைகளை கமல் அலசி ஆராய்வார். ஆனால், இந்த சீசனில் இதுவரை அப்படி எதுவுமே நடந்தது கிடையாது. அவ்வளவு ஏன் ரசிகர்களுக்கு அறிவுரை என்பதை கூறுவதற்கு பதிலாக டிப்ஸ் என்றுதான் கூறி வருகிறார். இப்படி ஒரு நிலையில் இன்றைய முதல் ப்ரோமோ வெளியாகி இருக்கிறது அதில் இந்த வாரம் நடைபெற்ற பாலாஜி மற்றும் ஆறுக்கு இடையிலான பிரச்சனை அனிதா மற்றும் பிரியாவிற்கு இடையிலான பிரச்சனை என்று பல விஷயங்களை சூசகமாக தெரிவித்துள்ள கமல் இவர்களுக்கு எத்தனை முறை சொன்னாலும் புரிய மாட்டேங்குது என்றுகூறியுள்ளார். இந்த வாரமாவது கமல் தனது சாட்டையை எடுத்து பேசுவாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.