நல்லபாம்பிடம் 74 முறை கடி வாங்கிய நபர்.. விடாமல் பல ஆண்டுகளாக துரத்தும் அதிர்ச்சி சம்பவம்

பாம்பு பழி வாங்கும் காட்சிகளை சினிமாவில் பார்த்திருப்போம். ஆனால், இது நிஜ சம்பவம். சித்தூர் மாவட்டத்தில் உள்ள கும்மரகுண்டா என்ற கிராமத்தில் வசித்து வரும் கூலித்தொழிலாளி சுப்ரமணியம் தான் இந்த தாக்குதலுக்கு உள்ளானவர்.

முதன் முதலில் இவர் ஐந்தாம் வகுப்பு படிக்கும் போது இவரை ஒரு நல்ல பாம்பு கடித்துள்ளது. அப்போது மருத்துவமனையில்உயிருக்கு போராடி உரிய சிகிச்சை மூலம் உயிர்பிழைத்துள்ளார்.

அன்று முதல் இன்று வரை இவரை 74 முறை நல்ல பாம்பு கடித்துள்ளது. இந்த பாம்பிற்கு பயந்து கொண்டு பெங்களூருவிற்கு வேலைக்கு சென்று அங்கேயே வசித்து வந்துள்ளார்.

ஆனால், பெங்களூருவிலும் இவரை பாம்பு கடித்துள்ளது. உயிர் பயத்தால் வெளியூர் சென்றால் அங்கேயும் பாம்பு கடிக்கிறதே என்று மீண்டும் தன்னுடைய சொந்த ஊருக்கு திரும்பி வந்துவிட்டார்.

பாம்பு இவரை கடிக்க வில்லையென்றாலும் தினமும் ஏதாவது ஒரு இடத்தில் இவரது கண்ணில் பட்டு விடுமாம். இப்படி அன்றாடம் பாம்பை பார்த்து பயந்து போன இவர், தகுந்த ஜோதிடர்களிடம் விசாரித்து பல பரிகாரங்கள் செய்தும் பயனில்லை.

கூலி வேலைக்கு சென்று பிழைப்பு நடத்தி வரும் இவருக்கு இப்படி பாம்பு கடியால் மட்டுமே வருடத்திற்கு 50 ஆயிரம் ரூபாய்கள் செலவு ஆகின்றதாம். இது தனக்கு மிகுந்த மனஉழைச்சலை ஏற்படுத்துவதாக வேதனையுடன் கூறுகிறார் சுப்ரமணியன்.

இது குறித்து, பிரபல பாம்பு பிடிக்கும் நிபுணர் ரகுராம் அவர்களிடம் கேட்ட போது, பாம்பிற்கு நியாபக சக்தி என்ற ஒன்றே இல்லை. அப்படி இருக்கும் போது இவரை மட்டும் எப்படி துரத்தி துரத்தி கடிக்கின்றது என்பது புரியவில்லை என்று கூறுகிறார்.