மாஸ்டர் படத்திற்கு பிறகு தளபதி 65 படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது அனைவருக்கும் தெரிந்ததுதான். மேலும் தளபதி 65 படத்தை முருகதாஸ் இயக்க இருந்ததாகவும் தகவல்கள் கிடைத்தது.

ஆனால் முருகதாஸ் சொன்ன கதை விஜய்க்கு முழு திருப்தி கொடுக்காததால் உடனடியாக இயக்குனரை மாற்றிவிட்டார் தளபதி. பலமுறை கதையில் மாற்றம் செய்யச் சொல்லியும் பழைய குருடி கதவை திறடி என அப்படியே வந்து நின்றதால் முருகதாஸுக்கு இந்த நிலைமை.

இந்நிலையில் தளபதி 65 பட வாய்ப்பு காலியாக இருப்பதை அறிந்த பல இளம் இயக்குனர்கள் தொடர்ந்து தளபதி விஜய்யை சந்தித்து கதை கூறி வருகின்றனர். ஏற்கனவே விஜய் டிக் அடித்து வைத்துள்ள வெற்றிமாறன் தற்போது பிசியாக இருக்கிறார்.

இந்நிலையில் ஒரு இளம் இயக்குனர் இருந்தால் சரியாக இருக்கும் என விரும்பிய விஜய்க்கு கதை சொல்ல அனிருத் சிபாரிசில் உள்ளே நுழைந்தார் நெல்சன் திலிப்குமார். ஏற்கனவே கோலமாவு கோகிலா மற்றும் டாக்டர் போன்ற படங்களை இயக்கி முடித்துள்ளார்.

இந்நிலையில் காமெடி கலந்த ஆக்ஷன் கதையை விஜய்க்கு கூற, இதுதான் தளபதி 65 படத்திற்கு சரியான கதை என தேர்ந்தெடுத்து விட்டாராம் தளபதி விஜய். ஆனாலும் கதையில் ஆங்காங்கே சில திருத்தங்கள் செய்யுமாறு நெல்சனிடம் விஜய் தெரிவித்துள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளது.

இதனால் நல்ல கதையை தேவையில்லாமல் பில்டப் பண்ணி நாசமா போய் விடுமோ என கவலையில் இருக்கிறாராம் நெல்சன் திலிப்குமார். இருந்தாலும் விஜய்யிடம் எப்படி சொல்வது என தயங்கி கொண்டிருக்கிறாராம்.

இயக்குனர்களை அவர்கள் போக்கில் விட்டால் மட்டுமே படம் சிறப்பாக அமையும் என்பது விஜய்க்கு தெரியாதா என்ன. ஏற்கனவே பல முன்னணி நடிகர்கள் கதையில் தலையிட்டு பல படங்கள் சொதப்பியுள்ளதை பார்த்திருப்பாரல்லவா.