தனக்கு வரப்போகும் கணவன் இப்படிதான் இருக்கவேண்டும் திருமணத்திற்கு கண்டிஷன் போட்ட த்ரிஷா

சூர்யாவின் மௌனம் பேசியதே படம் மூலம் ஹீரோயினாக அறிமுகமான த்ரிஷா தொடர்ந்து 17 ஆண்டுகளாக முன்னணி நடிகையாக இருக்கிறார்.

17 ஆண்டுகளாக ஹீரோயினாக நடிப்பது சாதாரண விஷயம் அல்ல. மேலும் நடிக்க வந்த புதிதில் இருந்தது போன்றே இன்னும் இளமையாக இருக்கிறார் த்ரிஷா. யோகா தான் அதற்கு காரணம் என்கிறார்.

லாக்டவுனுக்கு முன்பு த்ரிஷா மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆனார். அந்த படத்திற்காக அவர் தன்னை தயார்படுத்திக் கொண்டிருக்கிறார்.

நடிகை த்ரிஷாவும், தெலுங்கு நடிகர் ராணாவும் காதலிப்பதாக பல ஆண்டுகளாக பேசப்பட்டது. ஒரு கட்டத்தில் அவர்கள் பிரிந்துவிட்டதாக கூறப்பட்டது.

இந்நிலையில் அவர்கள் காதலை புதுப்பித்துக் கொண்டதாக லாக்டவுன் நேரத்தில் பேச்சு கிளம்பியது. ஆனால் ராணா மிஹீகா பஜாஜை காதலித்து லாக்டவுனின்போது திருமணம் செய்து கொண்டார்.

முன்னதாக த்ரிஷாவுக்கும், தயாரிப்பாளர் வருண் மணியனுக்கும் நிச்சயதார்த்தம் நடந்தது. ஆனால் திருமணத்திற்க பிறகு படங்களில் நடிக்கக் கூடாது என்று வருண் மணியன் கூறியதால் அவரை பிரிந்தார் த்ரிஷா.

சினிமா தான் எனக்கு உயிர், கடைசி மூச்சு இருக்கும் வரை நடித்துக் கொண்டே இருப்பேன் என்றார் த்ரிஷா. இந்நிலையில் திருமண திட்டம் குறித்து த்ரிஷா கூறியிருப்பதாவது, என்னை முழுமையாக புரிந்து கொள்பவரை தான் நான் திருமணம் செய்து கொள்வேன்.

என் திருமணம் கண்டிப்பாக காதல் திருமணம் தான். என்னை புரிந்து கொள்ளும் நபரை நான் சந்திக்கும்போது தான் திருமணம். அது வரை சிங்கிளாக தான் இருப்பேன்.

மனதுக்கு பிடித்த நபரை நான் சந்திக்காமல் போய்விட்டால், கடைசி வரை சிங்கிளாக இருக்கவும் தயார் என்றார்.மணிரத்னத்தின் கனவுப் படமான பொன்னியின் செல்வனில் ஐஸ்வர்யா ராய் பச்சன், விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி உள்ளிட்டோர் நடிக்கிறார்கள். பொன்னியின் செல்வன் நாவல் ரசிகர்கள் அனைவரும் இந்த படத்தை பெரிதும் எதிர்பார்க்கிறார்கள்.

முன்னதாக லாக்டவுன் நேரத்தில் த்ரிஷாவும், சிம்புவும் நடித்த கார்த்திக் டயல் செய்த எண் குறும்படம் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.