காட்டுத்தீயாய் பரவும் பிக்பாஸ் ஷிவானியின் சிறுவயது புகைப்படங்கள்…லைக்குகளை அள்ளி விளாசும் ரசிகர்கள்

பிக் பாஸ் புகழ் நடிகை ஷிவானியின் சிறுவயது புகைப்படம் ஒன்று இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது.

கொரோனா ஊரடங்கில் மிகவும் பிரபலமடைந்த நபர்களில் அவரும் ஒருவர் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

தனது போட்டோஷூட் படங்களால் தமிழ் ரசிகர்களின் இதயங்களைக் கொள்ளை கொண்டவர். மில்லியன் ரசிகர்களை குவித்தார்.

இந்நிலையில் அவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கு கொண்டதிலிருந்து அமைதியாக இருந்தாலும், தேவையான இடங்களில் தனது கருத்தை நேர்மையாக பதிவு செய்கிறார்.

2001-ஆம் ஆண்டு பிறந்த அவருக்கு 19 வயது தான் ஆகிறது. அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது சிறுவயது புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.

அதற்கும் பத்து வருடங்களில் தற்போது இருக்கும் ஷிவானிக்கும் எவ்வளவு வித்தியாசங்கள் என்று ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.