கண்டிப்பாக ரஜினி முதல்வர் வேட்பாளர் இல்லை.. இவர்தான்.! ரஜினியின் அதிரடி முடிவு.!!

தமிழக அரசியலில் நடிகர் ரஜினிகாந்த் கட்சி தொடங்குவதாக பல ஆண்டுகளாக கூறி வருகிறார். 2017 ஆம் ஆண்டு தான் அரசியலுக்கு வருவது உறுதி என அறிவித்த ரஜினிகாந்த் அதற்கான எந்த முனைப்பும் காட்டாமல் அமைதியாக இருந்தார்.

தற்போது தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கி வருவதால் ரஜினி அரசியலுக்கு வரவேண்டும் என அவரது ஆதரவாளர்கள் தெரிவித்து வந்தனர். இதன் எதிரொலியாக ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி நேற்று ஜனவரி அரசியல் கட்சி தொடங்கப் போவதாக ரஜினிகாந்த் அறிவித்தார். இதனால் அவரது ஆதரவாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும் ரஜினி கட்சியின் மேற்பார்வையாளராக தமிழருவி மணியன் நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், ரஜினி கட்சியின் முதலமைச்சர் வேட்பாளர் குறித்து தமிழருவி மணியன் கூறியதாவது, முதல்வர் வேட்பாளர் தான் இல்லை என்பதும் ரஜினி உறுதியாக உள்ளார். தனது கட்சியின் இளைஞர் ஒருவர் தான் முதல்வர் வேட்பாளராக முன் நிறுத்தப்படுவார் என்று ரஜினியை தெரிவித்திருக்கிறார். ரஜினி அப்படி ஒரு முடிவில் இருந்தாலும் அவர் முதல்வராக வரவேண்டும் என்பது தான் மக்கள் விரும்புகின்றனர் என கூறினர்.