இந்த ஒரு காரணத்திற்காகத்தான் திருமணமான பெண்கள் மெட்டி அணிகிறார்களா?யாரும் அறிந்திராத உண்மை தகவல் உங்களுக்காக

நமது முன்னோர்கள் எப்போதுமே அறிவியலும் ஆன்மீகமும் கலந்த விசயங்களையே அறிமுகம் செய்கின்றனர்.

ஒரு பெண் திருமணமானவர் என்பதை உணர்த்துவது அவர் கால் விரல்களில் அணிந்திருக்கும் மெட்டிதான்.

நெற்றி உச்சி வகிட்டில் பொட்டு வைத்திருப்பார். கழுத்தில் மாங்கல்யம், கால்களில் மெட்டி அணிவது கூட அடையாளம் என்பதை விட ஆரோக்கியம் உள்ளது என்பதை உணர்ந்துதான் அதை அணியச் சொல்கின்றனர்.

பெண்களது கருப்பைக்கான முக்கிய நரம்புகள் கால் விரல்களிலேயே இருக்கிறது.

வெள்ளியில் மெட்டி அணிவதால் வெள்ளியில் இருக்கும் ஒருவித காந்த சக்தி கால் நரம்புகளில் ஊடுருவி நோய்களை தடுக்கும் ஆற்றல் உடையது.

முக்கியமாக கருப்பை நோய்களை கட்டுப்படுத்துகிறது. பெண்கள் மெட்டியை பெருவிரலில் இருந்து இரண்டாவது விரலில் அணிவதன் மூலம் கர்ப்பப்பை ஆரோக்கியமாகவும், கர்ப்பப்பையில் இரத்த ஓட்டம் சீராகவும் பாதுகாக்கப்படுவதாக அறிவியல் உண்மை கூறுகிறது.
கர்ப்பத்தின்போது உருவாகும் மயக்கம், வாந்தி போன்றவற்றை குறைக்கவும் கருப்பையின் நீர் சமநிலையை பேணுவதற்கும் மெட்டி பயன்படுகிறது.

கால் விரலில் அணியும் மெட்டி நாம் நடக்கையில் பூமியுடன் அழுத்தப்படுவதால் நமது உடல் பிணிகளை முக்கியமாக கர்ப்பிணி பெண்களது உடல் பிணிகளைக் குறைக்கும் என்கின்றனர்.

ஆகையால் பெண்கள் காலில் மெட்டி அணிவது நல்லது.