இது வரை கிரிக்கெட் விளையாடும் போது மரணித்த வீரர்கள் யார் யார் தெரியுமா ? இத்தனை மரணங்களா!! அதிர்ச்சியூட்டும் உண்மை !

நம்மில் பலருக்கும் உற்சாகம் அளிக்கும் ஒரு விளையாட்டு கிரிக்கெட். இந்த விளையாட்டிலும் கூட, பல திடுக்கிடும் மற்றும் சோகமான சம்பவங்கள் நடைபெற்றுள்ளன. கிரிக்கெட் விளையாட்டை தங்களது வாழ்க்கையாக கொண்டு களமிறங்கிய கிரிக்கெட் வீரர்கள் கிரிக்கெட் விளையாட்டின் போது மரணித்து உள்ளனர். அவ்வாறு மறைந்து போன நான்கு வீரர்களைப் பற்றித்தான், இந்த பதிவில் பார்க்கப் போகின்றோம்.

பிலிப் ஹியூஸ் அவுஸ்ரேலியா அணிக்காக சர்வதேச போட்டிகளில் விளையாடி வரும்போது அவருக்கு வெறும் 20 வயது மட்டுமே நிரம்பி இருந்தது. 2009ஆம் ஆண்டு டெஸ்ட் போட்டிகளில் களமிறங்கிய இவர், 2013ஆம் ஆண்டு ஒருநாள் சர்வதேச கிரிக்கெட்டிலும் தடம் பதித்தார்.


பிலிப் ஹியூஸ் அவுஸ்ரேலியா அணிக்காக சர்வதேச போட்டிகளில் விளையாடி வரும்போது அவருக்கு வெறும் 20 வயது மட்டுமே நிரம்பி இருந்தது. 2009ஆம் ஆண்டு டெஸ்ட் போட்டிகளில் களமிறங்கிய இவர், 2013ஆம் ஆண்டு ஒருநாள் சர்வதேச கிரிக்கெட்டிலும் தடம் பதித்தார்.

2009ஆம் ஆண்டு நடைபெற்ற டெஸ்ட் தொடரில் சதம் அடித்தார். அதன் பிறகு அவுஸ்திரேலிய அணியின் ஒரு முக்கிய ஆட்டக்காரராக வலம் வந்தார். 2014ஆம் ஆண்டு அவுஸ்திரேலிய உள்நாட்டு மாநிலங்களுக்கு இடையே நடைபெறும் செஃபில் சில் என்ற தொடரில் சவுத் அவுஸ்திரேலிய அணிக்காக விளையாடி வந்தார்.

குறித்த போட்டியில் பகல் உணவுக்கான ஆட்டம் நடைபெற்ற வேளையில் 63 ஓட்டங்கள் பெற்ற நிலையில், களத்தில் விளையாடி க் கொண்டிருந்தார். ஷேன் போர்ட் என்ற பந்துவீச்சாளரின் பந்தை அடிக்க முற்பட்டபோது பந்து அவரது இடது கழுத்து மற்றும் காதிற்கு இடைப்பட்ட பகுதியில் அதிவேகமாக தாக்கியது.

குறித்த நிகழ்வை தொடர்ந்து பிலிப் ஹியூஸ் மயக்கம் அடைந்ததால், உடனடியாக அன்றைய ஆட்டம் இரத்து செய்யப்பட்டு, பிலிப் ஹியூஸ் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பிலிப் ஹியூஸ் மூன்று நாட்களின் பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். பிலிப் ஹியூஸின் மரணத்தை ஆராய்ந்து கிரிக்கெட் சபையானது தலைக்கவசம் மற்றும் கழுத்து பகுதியின் பாதுகாப்பு போன்றவற்றில் பல மாற்றங்களை கொண்டு வந்தது.

ராமன் லம்பா – இந்தியா
உத்திரபிரதேசத்தில் மீரட் என்ற இடத்தில் பிறந்த இவர், 1980 களில் ரஞ்சி கிண்ண தொடர் மூலமாக தனது கிரிக்கெட் வாழ்க்கையை இந்திய அணிக்காக ஆரம்பித்து, 1998ஆம் ஆண்டு வரை விளையாடியுள்ளார். இவர் பங்கேற்றுக் கொண்ட இறுதிப் போட்டியானது, பங்களாதேசில் நடைபெற்றது.

உடனடியாக அங்குள்ள மருத்துவமனையில் இவரை அனுமதித்து, டெல்லியிலிருந்து தலைசிறந்த நரம்பியல் மருத்துவர்களை வரவழைத்து, சிகிச்சை அளித்தார்கள். ஆனால், சிகிச்சை பலனின்றி லம்பா உயிரிழந்தார்.

அப்துல் ஆசிஸ் – பாகிஸ்தான்
பாகிஸ்தான் கிரிக்கெட் வீரரான இவர், பாகிஸ்தான் அணியின் விக்கெட் காப்பாளராவும், ஆரம்ப துடுப்பாட்ட வீரராகவும் திகழ்ந்தார். உள்நாட்டிற்கிடையே நடைபெற்ற கிரிக்கெட் போட்டி ஒன்றில், தில்தா முகமது அவான் என்ற பந்து வீச்சாளர் வீசிய பந்தானது, எதிர்பாராத விதமாக ஆசிஸின் இதய பகுதியில் அதிவேகமாக பட்டது.

யாரும் சற்றும் எதிர்பாராத விதமாக மயங்கி விழுந்த நிலையில் அப்துல் ஆசிஸ் கிரிக்கெட் உலகை விட்டும் பிரிந்து சென்று விட்டார். இதில் வருத்தத்திற்குரிய விடயம் என்றால் அவர் இறந்த போது அவருக்கு வெறும் 18 வயதுகள் மாத்திரமே ஆகும்.

டாரின் ரண்டல் – தென்னாபிரிக்கா
இவர் தென்னாபிரிக்காவை சேர்ந்த கிரிக்கெட் வீரர் ஆவார். 2009 மற்றும் 2010ஆம் ஆண்டுகளில், தனது நாட்டிற்காக சிறந்த ஆட்டத்தை ஆடியுள்ளார். 2013ஆம் ஆண்டு நடைபெற்ற போர்டர் கிரிக்கெட் போர்ட் பிரிமியர் லீக் தொடரின் போது, வேகமான பந்து இவரது தலையில் மோசமாக தாக்கியதால் மைதானத்திலேயே உயிரை விட்டார்.