விடாமல் கேள்வி கேட்ட சனம் கோவத்தில் செருப்பால் அடித்த பாலா.. அதிர்ச்சியான ரம்யா நீங்களே பாருங்க

பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி நாளுக்கு நாள் தன்னுடைய விறுவிறுப்பை கூட்டி கொண்டே செல்கிறது. ஏற்கனவே ஒளிபரப்பான மூன்று சீசன்கள் காதல், மோதல் என்ற கலவையாய் இருந்தாலும், இந்த சீசன் மட்டும் மோதலில் தொடங்கி மோதலில் முடிவடைந்து விடும் போல.

ஏனெனில் பிக்பாஸ் 4 நிகழ்ச்சி தொடங்கி 60 நாட்களுக்கு மேலாகியும், இதுவரை சண்டை மட்டும்தான் போட்டுக் கொண்டிருக்கின்றனர் இந்த சீசனின் போட்டியாளர்கள். இதனால் பிக் பாஸ் கடுப்பாகி மாமா வேல பார்க்கிறதயே நிறுத்திட்டாரு.

இந்த நிலையில் நேற்று பாலாஜி- சனம் ஷெட்டிக்கு இடையே நடந்த சண்டையில் பாலா தன்னை தானே செருப்பால் அடித்துக் கொண்டது பிக்பாஸ் ரசிகர்களிடையே அதிக அளவில் பேசப்பட்டு வருகிறது.அதாவது, நேற்று பிக் பாஸ் கால் சென்டர் டாஸ்கில் சிறப்பாக செய்தவர்களில் இருந்து சுவாரஸ்யம் குறைந்தவர்கள் வரை வரிசையாக நிற்கும்படி சொன்னார்.

இதற்காக பல்வேறு சண்டைகள் வீட்டிற்குள் மூண்டன. அதில் ஒன்றுதான் பாலா- சனம் ஷெட்டி இடையே நடந்த சண்டை.மேலும் இருவருக்கும் வாக்குவாதம் முத்தி போக பாலா சனத்திடம், ‘இனிமேல் உன் கிட்ட பேசுனா அதுக்கு அர்த்தம் இதுதான்’ என்று கூறி, தன்னை தானே செருப்பால் அடித்துக் கொண்டார் பாலா.

என்ன தான், ரெண்டு பேருக்கு இடையே சண்டை என்றாலும் ‘பாலா இப்படி செய்திருக்கக் கூடாது’ என்று இணையத்தில் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர் பிக்பாஸ் ரசிகர்கள்.