இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் நடிகர் விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் தான் கோப்ரா. இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மிக பெரிய வரவேற்பை பெற்றது.

மேலும் இதற்கு இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கிய டிமான்டி காலனி மற்றும் இமைக்க நொடிகள் உள்ளிட்ட திரைப்படங்கள் வெற்றி பெற்றுள்ளது.

தற்போது இவர் நடிகர் விக்ரமுடன் கைகோர்த்துள்ளதால் கண்டிப்பாக பெரிய விருந்து உள்ளது என அனைத்து ரசிகர்களும் ரெடியாக உள்ளனர்.

இந்நிலையில் தற்போது கோப்ரா படத்தின் படப்பிடிப்பு பணிகளை மீண்டும் தொடங்கியுள்ளதால், இது குறித்து இயக்குனர் அஜய் ஞானமுத்து ட்விட்டரில் புகைப்படத்துடன் பதிவிட்டுள்ளார்.

அந்த புகைப்படத்தை பார்க்கும்போது கமலின் விக்ரம் டீசரில் துப்பாக்கிகளுடன் அமர்ந்திருந்தது போலவே, தற்போது வெளியாகியுள்ள கோப்ரா புகைப்படத்திலும் விக்ரம் முகமூடி அணிந்து கொண்டு துப்பாக்கிகளுடன் கண்ணாடி முன் அமர்ந்துள்ளார்.

இதோ அந்த புகைப்படம்..