தமிழ் சினிமாவில் உள்ள நடிகர்களில் தற்போதைக்கு கைவசம் அதிக படங்கள் வைத்துள்ள நடிகர் என்றால் அது விஜய் சேதுபதிதான்.

தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம் என மற்ற மொழிகளிலும் சில படங்களில் நடித்துக்கொண்டிருக்கிறார். இந்தி படத்திலும் விரைவில் நடிக்க இருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளது.

தமிழ் சினிமா வட்டாரங்களில் மிகவும் மதிப்புள்ள நடிகராக பார்க்கப்படும் விஜய் சேதுபதியை பிரபல நடிகை ஐஸ்வர்யா ராஜேஸுடன் பிரபலம் ஒருவர் இணைந்து பேசியுள்ளது பலருக்கும் சங்கடத்தை கொடுத்துள்ளது.

விஜய் சேதுபதி மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் இருவரும் இணைந்து பல படங்களில் தொடர்ச்சியாக நடித்தனர். அது மட்டுமில்லாமல் ஒரு நடிகர் மற்றும் நடிகை தொடர்ந்து சில படங்களில் நடித்தால் அவர்கள் மீது கிசுகிசு வருவது சகஜம்.

அப்படித்தான் விஜய் சேதுபதி மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் விவகாரத்தில் நடந்துள்ளது. ஆனால் பிரபல பத்திரிகையாளரும் நடிகருமான பயில்வான் ரங்கநாதன், சமீபத்தில் வெளியிட்டுள்ள வீடியோவில் ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் விஜய் சேதுபதி ஆகியோர் நெருங்கி பழகி வந்தனர் எனவும், அது விஜய் சேதுபதி குடும்பத்தில் சிறு குழப்பத்தை ஏற்படுத்தியதாகவும் தெரிவித்துள்ளார்.

இதைக் கேள்விப்பட்ட ரசிகர்கள், நாளுக்கு நாள் பயில்வான் ரங்கநாதனின் பேச்சு மோசமாகிக் கொண்டே செல்கிறது என அவரை எச்சரித்து வருகின்றனர். அவர் பேசும் கிசுகிசுக்களுக்கு நடிகர் நடிகைகளும் எந்த வித எதிர்ப்பும் தெரிவிக்காமல் இருப்பதால் ரசிகர்கள் அதை உண்மை என்பதை போலவே கருதுகின்றனர்.