அசிடிட்டியை முழுமையாக தடுக்க இந்த 7 உணவுகளை தினமும் கொஞ்சமாவது சாப்பிடுங்க போதும்

அசிடிட்டி பிரச்சனை இன்றைக்கு பெரும்பாலனவர்களை பாதிக்கிறது.

உண்ணும் உணவை செரிப்பதற்கு சாதாரணமாக வயிற்றில் அமிலம் சுரக்கப்படும். இந்த அமிலம் அளவுக்கு அதிகமாக சுரக்கும் நிலையே அசிடிட்டி.

ஒவ்வொருவரும் தன் வாழ்நாளில் ஒருமுறையாவது அசிடிட்டி பிரச்சனையால் அவஸ்தைப்பட்டிருப்போம். அதனை போக்க அடிக்கடி மருந்துகளை தான் எடுக்க வேண்டும் அவசியமில்லை.

சில உணவுகள் கூட அசிடிட்டியை கட்டுப்படுத்துகின்றது. தற்போது அவை என்னென்ன என்பதை பார்ப்போம்.

உணவு இடைவேளை நேரத்தில் நீங்கள் வாழைப்பழம் சாப்பிடுவது அசிடிட்டியிலிருந்து உங்களைப் பாதுகாக்கிறது. மேலும் டீ அல்லது காபி தரக்கூடிய சோதனை வாழைப்பழத்தில் இருக்கும் பொட்டாசியம் தருகிறது
துளசி கிடைக்கும் போதெல்லாம் துளசி இலைகளை வாயில் போட்டு மென்று கொண்டே இருக்கலாம். வாட்டர் பாட்டிலில் 8 முதல் 10 துளசி இலைகளை போட்டு வைக்கலாம். இது போன்ற செயல்களை செய்வது உங்களுக்கு துளசியின் பயன்பாட்டினை நீங்கள் அதிகம் சாப்பிடக் கூடியதாக இருக்கும் இது உங்களுக்கு அசிடிட்டியிலிருந்து பாதுகாக்க உதவும்.
மோர் என்பது உங்களின் அசிடிட்டி பிரச்சனையில் இருந்தும் நிரந்தர தீர்வும் தரக்கூடியதாகும். மோரில் இருக்கும் அமிலத்தன்மை மற்றும் காரத்தன்மை ஆனது நமக்கு அசிடிட்டி தொல்லை ஏற்படாமல் தடுக்க உதவுகிறது.
உடல் சூட்டினைத் தணித்து, உடலை வெப்பநிலையை சமப்படுத்துவதற்கு இந்த இளநீர் முக்கியத்துவமானது. ஆனால் இதில் இன்னொரு அதிசயத்தக்க விஷயம் இது அசிடிட்டி க்கு எதிரான மருந்து ஆகும்.
பெருஞ்சீரகம் ஆனது செரிக்கும் தன்மையை அதிகப்படுத்தி உங்களுக்கு அசிடிட்டி தொல்லை ஏற்படாமல் தடுக்க முடிகிறது. பெருஞ்சீரக டீ போட்டு குடிக்கலாம் இது உங்களுக்கு இன்னும் நல்ல பலனை அளிக்கக் கூடியதாக இருக்கும்.
ஏலக்காய் அது அசிடிட்டி ஏற்படாமல் தடுப்பதற்கு முக்கிய பங்கு வகிக்கிறது. இரண்டு ஏலக்காய்களை எடுத்துக் கொண்டு அதனை தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து குடிக்கலாம்.
உணவு உண்ட பின் சிறு துண்டு வெல்லத்தைச் சாப்பிட்டு வரலாம். அது அசிடிட்டி ஏற்படாமல் தடுக்கும்.