தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மக்களின் தேவையை புரிந்து சிறப்பான ஆட்சியை செய்து வருகிறார். மக்களுக்கு நன்மை தரும் வகையில் பல நடவடிக்கைகள் மற்றும் திட்டங்களை அமுல்படுத்தி வருகிறார்.அவரது நடவடிக்கையால் கொரோனா வைரஸால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை ஒருநாளைக்கு 1500 ஆக குறைந்துவிட்டது. மேலும், அவர் எடுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக நிவா புயலால பாதிப்பு எதுவும் ஏற்படாமல் தமிழகம் தப்பித்துள்ளது. எனவே, அவரது ஆட்சியை பொதுமக்கள் பாராட்டி வ்ருகின்றனர்.

மேலும், அவரது திட்டதால் தமிழகத்தில் வேலைவாய்ப்பு அதிகரித்துள்ளது. அவரின் சிறப்பான நடவடிக்கையால் ஒசூரில் சிறு, குறு தொழில் நிறுவனங்கள் வளர்ச்சி அடைந்துள்து. ஒசூரில் 2 ஆயிரத்திற்கும் அதிகமான சிறு, குறு நிறுவனங்கள் செயல்பட்டு தொழில் நகரமாக மாறி, தற்போது முதன்மை தொழில் நகரமாக மாறியுள்ளது. மேலும், முதல்வரின் உத்தரவையடுத்து ஒசுர், குருபரப்பள்ளி மற்றும் சூளகிரியில் புதிதாக சிப்காட் தொழிற்சாலை அமையவுள்ளது. இந்த தொழிற்சாலை மூலம் ஒரு லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் கிடைக்கும் என அமைச்சர் எம்.சி.சம்பத் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் வேலை வாய்ப்பை அதிகரிக்க முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி எடுத்துவரும் நடவடிக்கைகளை மக்களும், பட்டதாரி வாலிபர்களும் பாராட்டி வருகின்றனர்.