பானை வயிறு தொப்பையை குறைக்க வேண்டுமா? இந்த உணவுகளை அடிக்கடி எடுத்து கொள்ளுங்கள்

தற்போது உள்ள காலகட்டத்தில் அனைவரையும் கவலை அடைய செய்யும் பெரிய பிரச்சனை எது என்றால் அது தொப்பை.

உடல் உழைப்பு இல்லாத இந்த அவசர யுகத்தில் 10ல் 8 பேர் தொப்பை பிரச்சினையால் அவதிப்படுகின்றனர்.

உண்மையில் வயிற்றுப் பகுதியில் சேரும் அதிக அளவு சதை, அதிக கொழுப்பு, சர்க்கரை நோய் மற்றும் இதய நோய்கள் உள்ளிட்ட நோய்களுக்கு வழிவகுக்கும். எனவே இதனை ஆரம்பத்தில் குறைப்பதே நல்லதாகும்.

நல்ல தட்டையான வயிறையும் உடல் வளத்தையும் பெற உங்கள் அன்றாட உணவில் சில உணவுகளை சேர்க்கவேண்டும். தற்போது அவை என்னென்ன என்பதை பார்ப்போம்.

ஒரு முட்டையில் சுமார் 6 கிராம்கள் அளவிற்கு புரோட்டீன்கள் இருப்பதுடன் வெறும் 70 கலோரிகள் மட்டும் கொண்டுள்ளது. இது உங்கள் வயிற்றை தட்டையாக வைக்கவும் அதே நேரம் தசைகளை மேம்படுத்தவும் சதை தளர்ச்சியை நீக்கவும் கூட உதவுகிறது.
ஆப்பிள் சிடர் வினிகர் வயிற்றின் சதைப்பற்றை குறைப்பதில் மிகவும் பலன் தரக்கூடியது. ஏனென்றால் இது இரத்ததில் சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்கவும் பசியை குறைக்கவும் கூட உதவுகிறது.
தொப்பையைக் கரைக்க உதவும் மற்றுமொரு உணவு ஆலிவ் எண்ணெய். இதில் காணப்படும் ஆண்டி ஆக்சிடென்டுகள் கொழுப்பு செல்களைக் கரைக்கும். இது மிகக் குறைந்த காலரிகளைக் கொண்டுள்ளதால் ஏற்ற ஒரு உணவாக இருக்கும்.
தயிரில் புரோட்டீன்கள் நிறைந்துள்ளதால் வயிற்றுப் பகுதியில் தசை சேர்க்கைக்கும் அவற்றை வலுப்படுத்தி நல்ல தோற்றத்துடன் கட்டுடன் வைக்கவும் உதவுகிறது.
எலுமிச்சையின் அமிலத்தன்மை உங்கள் வயிற்றை சுத்தப்படுத்தி வயிற்றில் கொழுப்பு மற்றும் குப்பைகள் சேருவதை தடுத்து உங்கள் வயிற்றை தட்டையாக்கும்.
புரோட்டீன் சத்து நிறைந்த பூசணிக்காயும் தொங்கும் சதைகளைப் போக்கி விரைவிலேயே தட்டையான வயிற்றைத் தரக்கூடிய ஒரு நல்ல உணவாகும்.
ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்த தேங்காய் உங்கள் உடம்பை உள்ளூர ஊட்டப்படுத்தி பெருத்த வயிற்றைத் தரும் கெட்ட கலோரிகள் எதுவும் சேர்க்கவிடாமல் செய்யும்.