உண்மையிலேயே கமல் – செல்வராகவன் கூட்டணி முறிந்தது அவரால்தான்…ஆர்வக்கோளாறில் வைத்த ஆப்பு….

சில வருடங்களுகு முன்பு நடிகர் கமலும், இயக்குனர் செல்வராகவனும் இணைந்து ஒரு புதிய படம் உருவாகவிருப்பதாக செய்திகள் வெளியானது. ஆனால், தற்போது அவரை அது நடக்கவே இல்லை.

இந்நிலையில், அந்த கூட்டணி எப்படி முறிந்தது என்கிற தகவல் வெளியே தெரியவந்துள்ளது. செல்வராகவன் கூறிய கதை கமலுக்கு பிடித்து போக அக்கதையில் நடிக்க கமலும் சம்மதம் தெரிவித்து விட்டார். கமலின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனமே தயாரிக்கவும் முன் வந்தது. பட வேலைகள் ஒரு பக்கம் நடந்து கொண்டிருக்கும் போது, செல்வராகவனின் தந்தை கஸ்தூரி ராஜா கமல்ஹாசனை சந்திக்க வேண்டும் என அவரின் மேனேஜரிடம் நச்சரித்துள்ளார். அவரை சந்திக்க விரும்பாத கமல் ‘என்ன விஷயம் என கேளுங்கள்?’ எனக்கூற, கஸ்தூரி ராஜாவோ அதை கமலிடமே கூறுவேன் என விடாப்பிடியாக அடம்பிடித்துள்ளார்.
அரை மனதுடன் அவரை சந்திக்க அப்பாயின்மெண்ட் கொடுத்த கமல், அவரை வர சொல்லுங்கள் எனக் கூறியுள்ளார். கமலின் அலுவலகம் வந்த கஸ்தூரி ராஜா, உங்களை வைத்து படம் இயக்க வேண்டும் என்பது என் வாழ்நாள் ஆசை எனக்கூறி கமலிடம் ஒரு கதையை கூற துவங்கி விட்டாராம். இதை கமல் சற்றும் எதிர்பார்க்க வில்லையாம். கமலிடம் கதையை கூற வேண்டும் எனில் அதை சொல்லி அவரிடம் அப்பாயிண்ட்மெண்ட் வாங்க வேண்டும். இதை எதுவுமே செய்யாமல் கஸ்தூரி ராஜா நடந்து கொண்டது கமலுக்கு கோபத்தை ஏற்படுத்தவே, செல்வராகவன் படத்தை நிறுத்தி விடுங்கள் எனக்கூறிவிட்டாராம்.

ஆர்வக்கோளாறில் நடந்து கொண்டு செல்வராகவன் கமலை இயக்கும் வாய்ப்பை அவரின் தந்தை கஸ்தூரிராஜாவே காலி செய்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது.