இலுப்பை எண்ணெயில் இத்தனை அபூர்வ சக்திகள் உண்டா? யாரும் அறிந்திராத சூப்பர் தகவல் இதோ

ஆலை இல்லாத ஊருக்கு இலுப்பைப்பூக்கள் என்பார்கள். இலுப்பை பூக்கள் அந்த அளவிற்கு இனிப்புத்தன்மை கொண்டவை. இலுப்பைப்பூ பச்சையாகச் சாப்பிட ருசியாக இருக்கும். இலுப்பைப்பூவைக் காயவைத்து பலவகையான பலகாரங்களைச் செய்யலாம். இலுப்பை எண்ணெய் ஏழைகளின் நெய் எணப்படுகிறது. இது சமையலில் உபயோகப்படுத்தப்படுகிறது.

இதன் விதையிலிருந்து பிழிந்தெடுக்கப்படும் எண்ணெய் இலுப்யெண்ணை எனப்படுகிறது. இலுப்பை எண்ணெய் சகல தேவர்களுக்கும்,சகல தெய்வங்களுக்கும்,சிவனுக்கும் பிரியமானது. ஆலயங்களில் தீபமேற்ற சிறந்தது.இந்த எண்ணெயை விளக்கில் ஊற்றி இறைவனை வழிபட காரியங்கள் வெற்றி பெரும் என்பது அசைக்க முடியாத நம்பிக்கை.

மணற் பாங்கான இடங்களில் நன்கு வளரும். இதன் தாயகம் இந்தியா. ஜார்கண்ட், உத்திரப்பிரதேசம், பீகார், மத்தியப்பிதேசம், கேரளா, குஜராத், ஒரிசா மற்றும் தமிழ் நாட்டில் அதிகமாகக் காணப்படும். தஞ்சை, சேலம், வடஆற்காடு, மற்றும் தென்னாற்காடு மாவட்டங்களில் காணப்படுகின்றன. இது சுமார் 60 அடி உயரம் வரை கூட வளரும். இதன் இலைகள் கரும்பச்சை நிறத்தில் பழபழப்பாக இருக்கும். நீளம் 13 – 20 செ.மீ. இருக்கும், அகலம் 2.5 – 3.5 செ.மீ. இருக்கும்.

இலைநுனியில் கொத்தான நீண்ட இலைகளையும், கொத்துக் கொத்தான வெண்ணிற மலர்களையும், முட்டை வடிவ சதைக் கனியையும் நொறுங்கக் கூடிய உறையினால் மூடப்பெற்ற விதையினையும் உடைய பால் போன்ற சாறுள்ள மரம். தெய்வ விருட்சமாக சிவன், விஷ்ணு கோயில் களில் வளர்க்கப்பட்டு வருகிறது.

இத்தகைய சிறப்பு வாய்ந்த மரங்களில் இலுப்பை மரமும் ஒன்று. கண்மாய், ஏரி, குளம், கரைகளிலும், பூங்கா போன்ற இடங்களிலும் சாலை ஓரங்களிலும் பரந்து விரிந்து காணப்படும் மரம்தான் இலுப்பை.

இது இந்தியா, இலங்கை, மியான்மர் நாடுகளில் அதிகம் வளர்கிறது. இதன் இலை, பூ, காய், பழம், வித்து, நெய், பிண்ணாக்கு, மரப்பட்டை, வேர்ப்பட்டை என அனைத்து பாகங்களும் மருத்துவப் பயன் கொண்டது. இலுப்பை மரத்திற்கு இருப்பை, சூலிகம், மதூகம் என்ற பெயர்கள் உண்டு.

விரை வீக்கம்

விரைப்பைகளில் நீர் அதிகம் சேர்ந்து கொள்வதால் ஹைட்ரொசீல் எனப்படும் விரைவீக்கம் ஏற்படுகிறது. இப்பிரச்சனையை தீர்க்க இலுப்பை எண்ணையை சிறிது அனலில் காட்டி இளஞ்சூட்டில் அந்த எண்ணையை விரல்களின் மீது தடவி வர விரைவீக்கம் குணமாகும். குறைந்தது 4, 5 தடவைகள் செய்தால் விரைவில் வீக்கம் குறையும்.

நரம்பு குறைபாடுகள்

உடல் முழுவதும் வலி மற்றும் நரம்பு சம்பந்தமான வியாதிகள் இருப்பவர்கள் வாரத்திற்கு இரண்டு முறை இலுப்பை எண்ணெயை வெதுவெதுப்பாகச் சூடுசெய்து தடவி வெந்நீர் ஒத்தடம் கொடுத்து வந்தால் இடுப்பு வலி, நரம்புத் தளர்ச்சி போன்ற பிரச்சனைகள் நீங்கும்.

பூச்சி கடி

நாம் வசிக்கின்ற வீட்டின் தோட்டங்கள் மற்றும் வீட்டின் சுவர் இடுக்குகளில் பூரான், தேள், விஷ வண்டுகள் போன்றவை இருக்கின்றன. இவை சமயங்களில் நம்மை கடித்து விடுவதால் அவற்றின் விஷம் நமது உடலில் பரவிவிடுகிறது. இலுப்பை எண்ணையை பூச்சி கடித்த இடங்களில் நன்கு தடவி விடுவதால் உடலில் பூச்சிக்கடியினால் பரவிய விஷம் முறியும். எரிச்சல் மற்றும் வீக்கமும் குணமாகும்.

சருமம்

சருமத்தின் நலனை பாதுகாப்பதில் இலுப்பை எண்ணெய் சிறப்பாக செயல்படுகிறது. இலுப்பை எண்ணையில் சருமத்தை மிருதுவாக்கும் மற்றும் சுருக்கங்களை போகும் சத்துகள் அதிகம் நிறைந்திருக்கின்றன. வாரமொரு முறை இலுப்பை எண்ணெய் உடல் முழுவதும் பூசி, அது நன்கு ஊறிய பின்பு குளித்து வருவதால் தோல் சம்பந்தமான அனைத்து வியாதிகளும் நீங்கும்.

சொறி, சிரங்கு

இலுப்பை எண்ணையை குழந்தைகளுக்கு வரும் மண்டைக்கரப்பான், கை கால்களில் வரும் சொறி, சிரங்கு இவைகளுக்குத் தடவிவர விரைவில் ஆறும்.

இடுப்புவலி

இலுப்பை எண்ணையை சற்று சூடாக்கி இடுப்புவலி, நரம்புகளின் பலவீனத்தால் உண்டான நடுக்கம், முதலிய பிரச்சனைகளுக்கு அவ்விடங்களில் நன்கு தேய்த்து வெந்நீரில் குளித்துவரக் குணமாகும்.

மேனி மிருதுவாக

இலுப்பை எண்ணெய்யைக் கொண்டு எண்ணெய்க் குளியல் செய்து வர நாடி நரம்புகள் வலுப்பெற்று உடல் ஆரோக்கியம் பெருகும், மேனி மிருதுவாகும். மனத்தெளிவும், சுறுசுறுப்பும் ஏற்படும்.

குடல் வறட்சி நீங்க

இலுப்பை எண்ணெய்யை உட்கொள்ளும்போது குடல் வறட்சி நீங்கி ஜீரணக்கோளாறு, புளித்த ஏப்பம், வயிற்றெரிச்சல் போன்றவை கட்டுப்படுத்தப்படும்.

மலம் கழிப்பதில் பிரச்னை

மலம் கழிப்பதில் பிரச்னை உள்ளவர்கள் இந்த எண்ணையை எடுத்து கொண்டால் மலத்தை இளக்கி வெளியேற்றும்.